அக்கடவல்லி சிவன்கோயில், கடலூர்
முகவரி :
அக்கடவல்லி சிவன்கோயில்,
அக்கடவல்லி, பண்ருட்டி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 607205.
இறைவன்:
இறைவி:
அறிமுகம்:
பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் சாலையில் ஆறு கிமீ சென்றால் கண்டிராக்கோட்டை. இங்கிருந்து துறையூர் வழியாக எட்டு கிமீ சென்றால் அக்கடவல்லி. இங்கு கிழக்கு பகுதியில் இருந்த சிறிய சிவன்கோயில் சிதைவடைந்தவுடன் பலகாலம் அப்படியே இருந்து, பின்னர் ஊர் மக்களின் முயற்சியாலும், அன்பர்களின் உழைப்பாலும் மீண்டும் கோயில் புதிதாக எழும்பி நிற்கிறது. இறைவன் கிழக்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார் இறைவி தெற்கு நோக்கி உள்ளார். இறைவன் கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் முருகன் உள்ளார் இறைவி கருவறை வாயில் அருகில் தெற்கு நோக்கிய பைரவர் சிறிய அளவில் உள்ளார் மறுபுறம் சூரியன் சந்திரன் உள்ளனர். கருவறை இறைவன் எதிரில் நந்தி உள்ளது. கருவறை கோட்டங்களில் தென்முகன், லிங்கோத்பவர் துர்க்கை உள்ளனர். சண்டேசர் உள்ளார். நவகிரகங்களும் உள்ளனர். பழம் கோயிலில் இருந்த லிங்கம் நந்தி ஒற்றை பாணம் தவிர அனைத்தும் புதிது. பல லட்சம் செலவு செய்யும் மக்கள் இறைவன் இறைவியின் பெயரை எழுதாமல் விட்டுவிடுவதால், முழுமையாக இறைவன் நினைவை கொண்டு செல்ல கொள்ள இயலாமல் போகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அக்கடவல்லி
அருகிலுள்ள இரயில் நிலையம்
பண்ருட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி