Friday Jun 28, 2024

அகத்தீச்சுரம் அகத்தீஸ்வரர் திருக்கோயில், கன்னியாகுமரி

முகவரி

அகத்தீச்சுரம் அகத்தீஸ்வரர் திருக்கோயில், வடுகன்பற்று, அகத்தீஸ்வரம் அஞ்சல் கன்னியாகுமரி மாவட்டம் – 629703

இறைவன்

இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: அறம் வளர்த்த நாயகி, அமுதவல்லி ஆவார்

அறிமுகம்

அகத்தீச்சுரம் அகத்தீஸ்வரர் கோயில் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரியிலிருந்து 5 கிமீ தொலைவிலும், நாகர்கோயிலிருந்து 15 கிமீ தொலைவிலும் இக்கோயில் தேவார வைப்புத்தலமாகும். அப்பர் பாடிய பெருமையுடையது. நாகர்கோயில் கன்னியாகுமரி சாலையில் உள்ள கொட்டாரம் என்னுமிடத்திலிருந்து 1 கிமீ தொலைவில் அமைந்துள்ள வடுகன்பற்று என்னுமிடத்திற்கு அருகில் உள்ளது. அகத்தியர் வழிபட்டத் தலமாதலின், இஃது ‘அகத்தீச்சுரம்’ எனப்பட்டது. கருவறையில் உள்ள மூலவர் அகத்தீசுவரர் ஆவார். இறைவி அறம் வளர்த்த நாயகி, அமுதவல்லி ஆவார். இத்தலம் அகத்தியர், தன்னுடைய மனைவி லோபா முத்திரையுடன் வழிபட்ட சிறப்பினையுடையது. 21 மார்ச் 1996இல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதே பெயரில் மற்றொரு கோயில் திண்டிவனம் பாண்டிச்சேரி சாலையில் உள்ள கிளியனூரில் அகத்தீசுவரம் என்ற பெயரில் உள்ளது.

புராண முக்கியத்துவம்

அகத்தியர், தம்முடைய மனைவி லோபாமுத்திரையுடன் வழிபட்ட தலம். கைலாயத்தில் பரமசிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது பூலோகவாசிகள் கைலாயம் சென்றனர். அதனால் கைலாயம் சமமின்றி தாழ்ந்தது. அப்போது சிவபெருமான் அகஸ்தியரிடம் தெற்கே செல்வாய், பொதிகை மலையில் அமர்வாய் என்றார். அகத்தியரும் அப்படியே செய்தார். சிவபெருமானுக்குத் திருமணம் முடிந்து கைலாயத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சென்றபின் அகத்தியர் தனியே ஓர் இடத்திற்குச் சென்று தியானத்தில் அமர்ந்தார். அவர் அப்படி இருந்த இடம் அகஸ்தீஸ்வரம் ஆயிற்று. இக்கோயில் பாண்டிய மன்னன் ஜயச்சந்திர ஸ்ரீ வல்லபன் என்பவனால் கட்டப்பட்டது. மதுரை பாண்டியன் ஒருவர் கன்னியாகுமரி பகவதியைத் தரிசிக்க வந்தான். தரிசனம் முடிந்தபின் பாண்டியன் கோயிலில் அமர்ந்து கொண்டிருந்தபோது அவனது குதிரை தறி கெட்டு ஓடியது. காவலர்கள் குதிரையைப் பிடிக்கச் சென்றனர். அரசன் வேறு ஒரு குதிரை மேல் ஏறி தவறிய குதிரையைக் காணச் சென்றான். ஒரு காட்டுப்பகுதியில் குதிரை நிற்பதைக் கண்டான். குதிரையின் வலது, இடது என இரு பக்கங்களிலும் நிழல் விழுவதைக் கண்டான். அக்காட்சி அதிசயமாக இருந்தது. ஜோதிடரிடம் அதற்கு காரணம் கேட்டார். அவர்கள் அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி கொடுத்த இடம் அது என்றார்கள். அரசனும் அந்த இடத்தின் பெருமை அறிந்து அங்கே ஒரு கோயில் கட்டினான். அந்த கோயில் வடுகன்பற்று கோயில் என்பது. கோயில் கருங்கல் திருப்பணி. அழகிய மணவாளப் பெருமாள் சந்நிதி தனியாகவுள்ளது. சோழர்கள் காலத்தில் இக்கோயில் சிறப்புற்று விளங்கியதை இங்குள்ள கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது. கி.பி.1127 ஆம் ஆண்டு கல்வெட்டு உடையவர்மன் ஸ்ரீ வல்லவதேவன் என்ற பாண்டிய மன்னன் இக்கோவிலைக் கட்டியது பற்றிக் கூறும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வடுகன்பற்று

அருகிலுள்ள இரயில் நிலையம்

கன்னியாகுமாரி

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top