வில்லிபாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்
முகவரி
வில்லிபாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்) சூணாம்பேடு வில்லிபாக்கம், சித்தாமூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 401.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் இறைவி: ஸ்ரீ முத்தாம்பிகை
அறிமுகம்
சென்னை பாண்டி ECR சாலையில் சூணாம்பேடு அருகில் உள்ள வில்லிபாக்கம் எனும் கிராமத்தில் ஒரு பழமையான சிவன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் இருக்கும் இறைவன் நாமம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர். அம்பாள் திருநாமம் ஸ்ரீ முத்தாம்பிகை. இரண்டு பிரகாரம் உடைய இக்கோயிலில் கொடிமரம் தரிசித்து உள்ளே சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கி உள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரரை தரிசிக்கலாம். மஹா மண்டபத்தில் விநாயகர், வள்ளி தேவசேநா சமேத ஆறுமுகர் , நால்வர் மற்றும் மூன்று பழைய அம்பாள் திருவடிவங்கள் காணப்படுகின்றன. அதோடு பஞ்சகோஷ்ட மூர்த்திகள், காசி விஸ்வநாதர் விசாலாக்ஷி, ஆறுமுகர் தேவிகளுடன், சண்டிகேஸ்வரர், பைரவர் மற்றும் சூரியன் சன்னதிகள் உள்ளன. அனைத்து வாகனங்களும் உள்ள இக்கோயிலில் கடந்த 60 ஆண்டுகளாக ப்ரம்ம உற்சவம் நடைபெறவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இகோயிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரண்டாம் ராஜேந்திர சோழன் காலத்தில் புணருத்தாரணம் நடந்ததாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. . ஆலய அர்ச்சகர் திரு சங்கர குருக்கள் (9787611643) இங்கு பூஜை செய்து வருகிறார். ஆலய நேரம் காலை 6-11, மாலை 5.30-7.30.
புராண முக்கியத்துவம்
நந்தி தேவர் தினமும் செய்யும் சிவபூஜைக்கு காந்தன்மற்றும் உமாகாந்தன் என்ற இரு தேவர்கள் தொண்டு செய்துவரும் வேளையில் ஒருநாள் மலர்பறிக்கும்போது மலர் தவறி கீழே விழுந்தபோது மீனாகவும் கிளியாகவும் மாறியதைக்கண்டு எல்லா மலர்களையும் கீழே போட்டு தாங்கள் செய்யவேண்டிய பணியினை மறந்தனர். அதனால் நந்தி தேவர் சாபம் பெற்று பூனையாகவும் வேடனாகவும் மாறினர். இருவருக்கும் ஸ்பரிசம் ஏற்படும் பொது அவர்களுக்கு சாப விமோசனம். பல காலம் இக்கோயில் இறைவனை பூனையும் வேடுவனும் பூஜை செய்து வந்தனர். ஒருநாள் பூனை பூஜை செய்யும் நேரத்தில் அங்கு வந்த வேடன் பூனையை அம்பால் அடிக்க அது இறைவன் மீது பட்டு இரத்தம் வழிந்தது. ஒரே சமயத்தில் பூனையும் வேடுவனும் இறைவன் மீது வழிந்த இரத்தத்தை துடைக்க கைகளை வைத்தபோது பூனைக்கும் வேடுவனுக்கும் ஸ்பரிசம் ஏற்பட்டு சாப விமோச்சனம் பெற்றனர். வேடுவர் வம்சத்தில் வந்தவர்தான் இன்றும் புஷ்ப கைங்கர்யம் செய்து வருகிறார்கள். ஸ்ரீ அகஸ்தியர் காசி செல்லும்போது இங்குள்ள இறைவனை பூஜை செய்து வழிபட்டதாக வரலாறு.. ஸ்ரீ அகஸ்தியர் வழிபட்டதால் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் எனும் திருநாமம் பெற்றார் ஈசன்.
நம்பிக்கைகள்
இங்கு வந்து வழிப்பட்டால் அனைத்து விதமான பிராத்தனைகளும் நடைபெறும்..
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வில்லிபாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை