வண்டியூர் வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், மதுரை

முகவரி :
அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில்,
வண்டியூர், மதுரை,
மதுரை மாவட்டம் – 625020.
தொடர்புக்கு: +91 452 262 3060
இறைவன்:
வீர ஆஞ்சநேயர்
அறிமுகம்:
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்கள் மதுரையில் தமக்கென கோயில் அமைக்க முடிவு செய்து, வைகைக் கரையில் இக்கோயிலை அமைத்ததாகவும், இதற்கென அவர்கள் தனியே ஆஞ்சநேயர் விக்ரகத்தினை ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து இங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத்தொடங்கியதாகவும் செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.
வைகை நதிக்கறையில் தென் திசை நோக்கி அமைந்துள்ள இத்தலம் வைகை ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படினும் கூட இக்கோயிலின் வாசலுக்கு முன்பாக மட்டுமே தண்ணீர் தொட்டுச் செல்லும் என்பது பெருமையாகக் குறிப்பிடத்தக்க செய்தியாகக் கூறப்படுகிறது.
இத்தலத்துடன் இணைந்து சிவன், விநாயகர், நாகர் மற்றும் பாண்டி முனிசாமிகளுக்கு தனிச்சந்நிதிகள் உள்ளது. இங்கு நைவேத்தியமாக தயிர் சாதம் படைக்கப்படுகிறது. இத்தலத்தில் ஆஞ்சநேயர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
நம்பிக்கைகள்:
திருமணத்தடை, குழந்தைப் பேறு இல்லாமைக்கும், தீராத வயிறு வேதனைக்கும் இங்குள்ள ஆஞ்சநேயரை மனம் உறுகி வழிபட்டால் அவை விரைவில் குணமாகிறது. மேலும், உடல் பலம் கொடுக்கவும், பயம் நீங்கிடவும், நல்ல புத்தி கிடைக்கவும். நோய்கள் தீரவும் வாழ்க்கை கீர்த்தி பெறவும் இங்கு பிரார்த்தனை செய்தால் நற்பலன் கிடைப்பதாக நம்பப்படுகிறது..
திருவிழாக்கள்:
மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், விளக்கு பூஜைகளும் நடத்தப்படுகிறது. மேலும் சித்திரைத் திருவிழாவின் போது அங்க பிரதட்சண நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
காலம்
500-1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வண்டியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை