லோனார் கமல்ஜா தேவி கோவில், மகாராஷ்டிரா
முகவரி
லோனார் கமல்ஜா தேவி கோவில், லோனார், புல்தானா மாவட்டம் மகாராஷ்டிரா – 443302
இறைவன்
இறைவி: கமல்ஜா தேவி
அறிமுகம்
பத்மாவதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட 5 வது கோயில், லோனார், புல்தானா மாவட்டம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு தேவி சுயம்புவாக தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த கோவில் கமல்ஜா தேவி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. லோனார் ஏரியின் கரையில் அதிகமான கோவில்கள் இருந்தாலும், இந்த கமல்ஜா தேவி கோவில் பாழடைந்த நிலையில் உள்ளது. கோயிலுக்கு வெளியே உடைந்த சிவலிங்கம் காட்சியளிக்கிறது. லோனாரின் கிராம தெய்வம் கமல்ஜா. அவள் உண்மையில் லட்சுமி தேவியின் அவதாரம். லாவணாசுரன் என்ற அரக்கனை விஷ்ணு போரிட்டு கொன்ற போது (லாவன் என்றால் உப்பு, அசுரன் என்றால் அரக்கன்) அவருடன் அப்போது லட்சுமி தேவியும் உடனிருந்தாள். லக்ஷ்மி தேவிக்கு இந்த இடம் மிகவும் பிடித்திருந்ததால் கமல்ஜாவாகவே அங்கேயே தங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. நவராத்திரி (ஒன்பது இரவுகள்) திருவிழாவின் போது, கிராமவாசிகள் கமல்ஜா தேவி கோயிலில் ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்கிறார்கள் மற்றும் மக்கள் தங்களுக்கு வேண்டியதை வேண்டிக்கொள்கிறார்கள். தம்பதியருக்கு ஆண் குழந்தை பாக்கியம் கிடைத்தால், இந்தக் கோயிலுக்கு வந்து வளையல்களை காணிக்கையாக வைப்பார்கள் என்பது பழங்கால மரபு.
காலம்
5 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
லோனார்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அவுரங்காபாத்
அருகிலுள்ள விமான நிலையம்
அவுரங்காபாத்