மேலையூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
மேலையூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், மேலையூர், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609107
இறைவன்
இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்
மயிலாடுதுறை – பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 19 வது கி மீ ல் மேலையூர் உள்ளது இங்கு பிரதான சாலையில் திருவெண்காடு சாலை சேருமிடத்தில் உள்ளது. சீனிவாசா மேல்நிலைப்பள்ளி, இதன் பின்புறம் காவிரிக் கரையோரம் அமைந்திருக்கின்றது;அகத்தீஸ்வரர் கோயில் காவிரியின் வடகரை சிவாலயம் இது. பள்ளியை ஒட்டி செல்லும் சாலை கோயில் செல்லும் சாலை போலவே இல்லை. சிறியதாக குப்பை கூளத்துடன் மக்கள் நடமாட்டமில்லாத …… பாதை போல உள்ளது. இங்கு காவிரி கரையினை ஒட்டி கிழக்கு நோக்கிய சிவாலயமாக உள்ளது அகத்தியர் வழிபட்ட கோயில். இக்கோயில் எதிரில் அழகிய செங்கழுநீர் விநாயகர் கோயில் ஒன்றுள்ளது. அதனை ஒட்டி ஒரு குளமும் உள்ளது. திருக்கோயில் வாயிலில் ஒரு பெரிய ஒதிய மரம் நிற்கிறது இதனடியில் பல நாகர் சிலைகள் உள்ளன. கோயில் இருக்குமிடம் அது தற்போது இருக்கும் நிலையை உள்ளே வருவதற்கு முன்னரே சூழல் நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. சுற்று சுவர் இடிந்து போய் கிடக்கிறது, குப்பைகள் இறைந்து, பல நாட்களாக யாரும் வந்து செல்லாத இடமாகவே காட்சியளிக்கிறது.
புராண முக்கியத்துவம்
கிழக்கு நோக்கிய இறைவன் – அகத்தீஸ்வரர். இறைவி – அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார். இறைவன் முன்னர் நீண்ட முகப்பு மண்டபம் உள்ளது. அதன் மேல் இறைவன் ரிஷபாரூடராக காட்சி தருகிறார். பிரகாரம் செங்கல் கொண்டு பரப்பப்பட்டுள்ளது. பராமரிப்பு இன்மையால் செடிகள் தரையை தாண்டி வளர ஆரம்பித்துவிட்டது. கருவறை கோட்டங்கள் ஏதுமில்லை. இக்கோயிலையும் மற்றும் இதே ஊரில் உள்ள இன்னொரு சிவாலயமான கிருபாநிதீஸ்வரரர் கோயிலும் மேலையூர் பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்த தாசில் பண்ணை குடும்பம் பராமரிக்கிறது. பூம்புகார் மேலையூரில் தாசில் பண்ணை இராமலிங்கம் பிள்ளை அவர்களால் கண்ணகிக்குக் பத்தினிகோட்டம் எழுப்பப்பட்டு ஆடி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பூ பல்லக்கில் ஏறி விண்ணுலகம் சென்றதை நினைவுபடுத்தும் விழா சுமார் நாற்பத்து நான்கு ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது. இவர்களின் நிர்வாகத்தில் உள்ள இக்கோயில் மீண்டும் நல்ல நிலைக்கு வர தாசில் பண்ணை குடும்பத்தினர் முயற்சி எடுக்க வேண்டுகிறேன். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி