முனிப்பாம்புல சிவாலயம், தெலுங்கானா
முகவரி
முனிப்பாம்புல சிவாலயம், பல்லேபஹத்-ராமண்ணேபேட்டா சாலை, முனிபாம்புலா, தெலுங்கானா 508113
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
முனிப்பாம்புலா என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ராமண்ணேபேட்டா மண்டலத்தில் உள்ள கிராமமாகும். இது தெலுங்கானா பிராந்தியத்தைச் சேர்ந்தது. இது மாவட்ட தலைமையகமான நல்கொண்டாவிலிருந்து வடக்கே 37 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ராமண்ணாப்பேட்டிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த சிவாலயம் முனிப்பாம்புலா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. முதன்மை தெய்வம் சிவன் மற்றும் அவருக்கு முன்னால் நந்தி உள்ளது. வேறு தெய்வம் இல்லை. இந்த சிவன் கோயில் முற்றிலும் பாழடைந்த நிலையில் உள்ளது. கோயில் கருவெல்லம் மரங்களால் சூழப்பட்டுள்ளது. பூஜைகள் சில சிறப்பு நாட்களில் நடத்துகின்றன.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முனிபாம்புலா
அருகிலுள்ள இரயில் நிலையம்
ராமன்னாபேட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
நாதிர்குல்