மீஞ்சூர் திருவெள்ளைவாயல் திருவெள்ளீஸ்வரர் திருக்கோயில், சென்னை
முகவரி :
திருவெள்ளைவாயல் திருவெள்ளீஸ்வரர் திருக்கோயில்,
திருவெள்ளைவாயல், மீஞ்சூர்,
சென்னை – 601203.
இறைவன்:
திருவெள்ளீஸ்வரர்
இறைவி:
சாந்த நாயகி
அறிமுகம்:
சென்னையை அடுத்த மீஞ்சூரில் இருந்து பழவேற்காடு செல்லும் சாலையில் 7 கிலோமீட்டர் தூரத்தில் திருவெள்ளைவாயல் உள்ளது. இங்கு சாந்தநாயகி சமேதராக திருவெள்ளீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி திருவருள் புரிகிறார். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயில் சோழ மன்னனால் கட்டப்பட்டது. பிரம்மசாஸ்தா முருகன் சன்னதியில் வழிபடப் பெறும் இரண்டு லிங்கங்கள் பல்லவ மன்னர்கள் காலத்தையும், இங்கு தூண்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் சோழர் காலத்தையும் சேர்ந்தது ஆகும். கடைசியாக 1993 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது அதற்கு பிறகு திருப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போது மிகவும் பாழடைந்த நிலையில் கோயிலுள்ளது.
புராண முக்கியத்துவம் :
வாயிலில் ராஜகோபுரம் இல்லாவிட்டாலும் சுதை வேலைப்பாடுகள் மிக்க நுழைவாயில் அழகுடன் திகழ்கிறது. திருசுற்றில் கிழக்கு நோக்கி விநாயகர் முருகன் சந்நிதிகள் அமைந்துள்ளன. இங்கு முருகன் பிரம்ம சாஸ்தாவாக காட்சி தருகிறார். மேலும் சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், சூரியன் சன்னதிகளும் உள்ளன. பைரவர் தனது வாகனமான நாய் இன்றி இருப்பது இக்கோவிலுக்கு சிறப்பு சேர்க்கிறது. இவர் ருது பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
இறைவன் திருவெள்ளீஸ்வரர் மேற்கு நோக்கிய கருவறையில் லிங்க வடிவில் காட்சி தருகிறார். மேற்கு பார்த்த நிலையில் காட்சி தரும் இறைவன் ஆயிரம் மடங்கு பலன் தருவார் என்பார்கள். இவரை வழிப்பட்டால் கடன் தொல்லை நோய் பாதிப்புகள் நீங்கும். கருவறைக்கு இடது புறத்தில் தெற்கு நோக்கி அம்பிகை, சாந்தநாயகி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவெள்ளைவாயல் ரேஷன் கடை
அருகிலுள்ள இரயில் நிலையம்
மீஞ்சூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை