மணவாளநல்லூர் சொக்கநாதர் சிவன்கோயில், கடலூர்
முகவரி
மணவாளநல்லூர் சொக்கநாதர் சிவன்கோயில், மணவாளநல்லூர், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம்
இறைவன்
இறைவன்: சொக்கநாதர்
அறிமுகம்
விருத்தாசலம் – சேலம் சாலையில் கொளஞ்சியப்பர் கோயில் உள்ளது. ஆனால் கிராமம் சற்று உள்ளடங்கி உள்ளது. பெரிய ஏரியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய அளவிலான கிராமம், இங்கு பிரதான தெருவில் கிழக்கு நோக்கிய விநாயகர் கோயிலும் அதனை ஒட்டியவாறே அருகில் கிழக்கு நோக்கிய சிவன் கோயிலும் உள்ளது. இறைவன் அழகான பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார். இறைவன் பெயர் இங்கு சொக்கநாதர். அருகில் ஒரு சன்னதியில் செல்லியம்மன் உள்ளார். வேறு சன்னதிகள் ஏதுமில்லை. இக்கோயில் கொளஞ்சியப்பர் கோயிலின் கீழ் உபகோயிலாக உள்ளது. கிராம மக்கள் யாரும் கோவிலுக்கு பெருமளவு வருவதில்லை. கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது.
புராண முக்கியத்துவம்
ஈசன் எழுந்தருளியுள்ள “திருமுதுகுன்றம்” எனும் விருத்தாசலத்திற்கு மேற்கில் 2 கிமி தொலைவில் காவும் பூவும் நெல்லும் கரும்பும் நிறைந்த வயல்களில் புள்ளினங்களும் வண்டினங்களும் இசைபாடும் இறைமணம் நிறைந்த மணவாளநல்லூர் என்னும் சிற்றூர் உள்ளது. “குரங்குலாவும் குன்றுரை மணவாள” என்று அருணாகிரிநாதர் அருளியவாறு மணவாளரான முருகப்பெருமான் எழுந்தருளிய காரணத்தால் இவ்வூர் மணவாளநல்லூர் என்றாகியது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மணவாளநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி