பெலாந்துறை சிவன்கோயில், கடலூர்
முகவரி
பெலாந்துறை சிவன்கோயில், பெலாந்துறை, திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் – 606105.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
கருவேப்பிலங்குறிச்சி – பெண்ணாடம் சாலையில் உள்ள முருகன்குடியின் தென்புறம் உள்ள வெள்ளாற்று பாலம் கடந்தால் கணபதிகுறிச்சி, அதன் தென்புறம் ஓடும் பெலாந்துறை வாய்க்காலை ஒட்டிய கரையில் ஒரு கிமீ சென்றால் பெலாந்துறை அணை உள்ளது. கிபி 959 l (கலியாண்டு4060) இருங்கோளன் நாராயணன் புகளைப்பவர் கண்டன் என்பவன் விந்த மகாதேவி பேரேரி என்ற பெயரில் ஒரு பெரிய ஏரியை தோண்டினான், அதன் மதகிற்கு விஜயாலயன் பெயரால் மதகமைத்துள்ளான் என திருமுட்டம் சிவன் கோயில் தூண் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. பராந்தகன் கட்டியதால் இந்த அணை பராந்தகன்துறை என அழைக்கப்பட்டது, தற்போது மருவி பெலாந்துறை எனப்படுகிறதுதற்போதுள்ள அணை 1876 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. கணபதிகுறிச்சியில் இருந்து பராந்தகன்துறை அணைக்கட்டுக்கு செல்லும் வழியில் சிறிய குடியிருப்பு பகுதியில் உள்ளது ஒரு விநாயகர் கோயில். அழகாக முகப்பு மண்டபத்துடன் கூடிய இந்த விநாயகர் கோயிலின் முகப்பு மண்டபத்தில் ஒரு லிங்கம் உள்ளது. பெரிய சிவன் கோயில் வளாகத்தில் தென்மேற்கு மூலையிலிருந்த விநாயகர் கோயில் தான் இது என ஊகிக்க முடிகிறது. சிவன் அம்பிகை ஆலயங்கள் சிதைந்து போய்விட்டன என்றே கொள்ளவேண்டும். ஒரு கல்கொடிமரம் அல்லது தூண் கல்வெட்டு ஒன்று பெலாந்துறையில் கிடைத்துள்ளது அதில் உள்ள தகவல்கள் ஆராய்ச்சியாளர்கள் மூலம் வெளிவந்தால் புதிய தளம் ஒன்று கிடைக்கலாம். மீதமுள்ள திருமேனிகள் கிடைக்கும் வரை, காலம் தின்ற மீதம் இந்த சிவலிங்கம் மட்டுமே என ஏற்றுக்கொள்ள வேண்டும். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெலாந்துறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திட்டக்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி