பெருமாங்குடி பெருமீஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி :
பெருமாங்குடி பெருமீஸ்வரர் சிவன்கோயில்,
பெருமாங்குடி, பாபநாசம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 614207.
இறைவன்:
பெருமீஸ்வரர்
அறிமுகம்:
பாபநாசத்தில் இருந்து திருக்கருகாவூர் சாலையில் இரண்டு கிமீ வந்து இடதுபுறம் திரும்பி ½ கிமீ சென்றால் ஒரு பிள்ளையார்கோயில் உள்ளது அதன் பிரகாரத்தில் வடபுறம் சிறிய சன்னதியாக உள்ளது கிழக்கு நோக்கிய லிங்கமும் அதன் எதிரில் ஒரு நந்தியும் உள்ளது. கோயில் அருகில் உள்ள குளத்தினை தூர் வாரும்போது கிடைத்த லிங்கமாகும் இது அதனால் பெருமீஸ்வரர் என பெயரிடப்பட்டு வணங்கி வரப்படுகிறது. மிருக சீரிட நட்சத்திரம் இந்த நட்சத்திரமானது வானில் முக்கோண வடிவில் இருக்கும். அதாவது மூன்று நட்சத்திரங்களின் கூட்டமைப்பு இது. மான் தலை போன்ற வடிவம் கொண்டது. மூன்று நட்சத்திரங்கள் என்பதால் தேங்காயின் மூன்று கண்களை ஒத்த வடிவம் போன்றது. சிவபெருமானின் முக்கண் போன்றது என்றும் சொல்லலாம். இந்த மிருகசீரிடத்தில் பிறந்தவர்கள் இந்த மான் தலங்களை குறித்து வைத்துக் கொண்டு சென்று வாருங்கள். உங்களுக்கான இறை மூர்த்திகள் இங்கே தான் உள்ளனர்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”



காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெருமாங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி