பூதாமூர் இந்திரலிங்கம் சிவன்கோயில், கடலூர்
முகவரி
பூதாமூர் சிவன்கோயில், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் – 606003.
இறைவன்
இறைவன்: இந்திரலிங்கம்
அறிமுகம்
முன்பு தனி ஊராக இருந்த பூதாமுர் தற்போது வெளிவட்ட சாலை அமைந்தவுடன் விருத்தாச்சலத்தின் புறநகர் ஆகிப்போனது. இந்த பூதாமூர் ஒரு பக்கம் நகர அமைப்பும் மறுபக்கம் முற்றிலும் கிராம அமைப்பும் கொண்டது. ஊரின் தெற்கில் மணிமுத்தாறு ஓடுவதால் இந்த ஊர் மக்கள் அங்கு உழவுத் தொழிலை செய்கின்றனர். பூதானம் என்றால் நிலக்கொடை; அவ்வாறு தானமளிக்கப்பட்ட ஊர் தான் இந்த பூதானம்+ஊர் தற்போது பூதாமூர் ஆகியுள்ளது. இவ்வூரில் இரு சிறிய சிவன் கோயில்கள் உள்ளன. இந்த ஊர் மிகவும் பழமையான கோயில்களை கொண்டது. பூதாமூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்கில் ஆற்றை நோக்கி செல்லும் காந்தி தெருவில் முனியப்பர் கோவில் உள்ளது. இதனை மக்கள் ஆலமரத்து முனி என அழைப்பர். இக்கோயிலை ஒட்டியே இந்த இந்திரலிங்கம் எனப்படும் சிவன்கோயில் உள்ளது. விருத்தாசலம் பழமலைநாதர் கோயிலை சுற்றி உள்ள அஷ்ட லிங்கங்களில் இரண்டு இந்த பூதாமூரில் உள்ளன. இக்கோயிலின் இறைவன் இந்திரதிக்கில் உள்ளதால் இந்திர லிங்கம் என பெயர். ஊரின் தென்புறத்தில் இருக்கும் மற்றோர் கோயில் அக்னி திக்கு லிங்கம் எனப்படுகிறது. கோயில் இல்லாமல் இருந்த இந்த லிங்கத்திற்கு திருக்கோயில் எழுப்ப எண்ணி கருவறை ஒன்றும் முகப்பில் சுற்றிவர என பெரிய மண்டபம் போல கட்டியுள்ளனர். அகலக்கால் வைத்ததாலோ என்னவோ பணிகள் பல மாதங்களாக அப்படியே கிடப்பில் உள்ளது. கருவறையில் லிங்கம் மட்டும் உள்ளது. வேறு தெய்வங்களோ சன்னதிகளோ இல்லை. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பூதாமூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாச்சலம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி