நரசிங்கமங்கலம் வன்மீகநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
நரசிங்கமங்கலம் வன்மீகநாதர் சிவன்கோயில்,
நரசிங்கமங்கலம், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611102.
இறைவன்:
வன்மீகநாதர்
இறைவி:
கமலாம்பிகை
அறிமுகம்:
நாகப்பட்டினம் – வேளாங்கண்ணி சாலையில் 11 கிமீ சென்றால் பரவை கிராமம், இதன் மேற்கில் செல்லும் ஆய்மழை சாலையில் 4-கிமீ தூரம் சென்றால் குறிச்சி கிராமம் கடுவையாற்றின் தென் பகுதி தான் இந்த நரசிங்கமங்கலம் கிராமம். இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்கள் குறிச்சி கீழகுறிச்சி ஆய்மழை மேலகுறிச்சி நரசிங்கமங்கலம் என்பன.
ஆய்மழை செல்லும் சாலையை ஒட்டியே இந்த கோயில் உள்ளது. கோயில் ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது, கோயில் அருகில் ஒரு குளமும் உள்ளது. கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை, தெற்கு நோக்கிய அம்பிகை கருவறை உள்ளது. இரு கருவறைகளையும் ஒரு சிறிய மண்டபத்தின் மூலம் இணைத்துள்ளனர். நரசிம்மவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட ஊர் என்பதால் நரசிம்மமங்கலம் என அழைக்கப்பட்டு இப்போது நரசிங்கமங்கலம் எனப்படுகிறது.
முன்னொரு காலத்தில் ஒரு பெரிய கரையான் புற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இறைவன் என்பதால் இறைவனுக்கு வன்மீகநாதர் என பெயர் என்கின்றனர். இங்குள்ள இறைவன் வயது ஐநூறு ஆண்டுகள் எனலாம், கோயிலின் வயது ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்று சொன்னால் முன்னூறு ஆண்டுகளுக்குள் எனலாம். மிகவும் பழுதடைந்து இருந்த இக்கோயிலை ஊர்மக்கள் 150 ஆண்டுகளின் பின்னர் புனரமைத்து 2011ல் குடமுழுக்கு செய்துளள்னர்.
இறைவன் – வன்மீகநாதர் இறைவி -கமலாம்பிகை
இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தி இறைவியும் அழகிய வடிவுடைய அம்பிகை. முகப்பு மண்டபத்தின் வெளியில் ஒரு மண்டபத்தில் நந்தி மண்டபம் அமைந்துள்ளது. கருவறை சுவற்றில் விநாயகர் – கண்டெடுத்த விநாயகர் என பெயர் கொண்டுள்ளார். ஒருவேளை புதையுண்டு இருந்தவரை கண்டெடுத்தால் இப்பெயராக இருக்கலாம். அடுத்து தென்முகன் உள்ளார், லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். சண்டேசர் பார்க்க அழகுடன் தனி கோயில் கொண்டு உள்ளார்.
பிரகார சிற்றாலயங்கள் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன் ஆகிய இருவருக்கும் உள்ளது வடகிழக்கில் நவகிரகம், பைரவர் இருவருக்கும் சிற்றாலயங்கள் அமைந்து உள்ளன. ஒரு கரம் உடைந்து துர்க்கை சிலை ஒன்றும், ஒரு தண்டாயுதபாணி சிலையொன்றும் வெளியில் கிடக்கிறது. ஒரு வேளை பூஜை ஒருவேளை விளக்கேற்றல் நடைபெறுகிறது என நினைக்கிறேன்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நரசிங்கமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி