Saturday Jan 04, 2025

தோல்பூர் அட்சலேஷ்வர் மகாதேவர் திருக்கோயில், இராஜஸ்தான்

முகவரி :

தோல்பூர் அட்சலேஷ்வர் மகாதேவர் திருக்கோயில்,

தோல்பூர்,

இராஜஸ்தான் மாநிலம் – 474001.

இறைவன்:

அட்சலேஷ்வர் மகாதேவர்

அறிமுகம்:

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் என்ற இடத்தில் அட்சலேஷ்வர் மகாதேவர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள ஒரு லிங்கம் அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. செம்பில் செய்யப்பட்ட நாகர் சிலை குடையாக இருக்க அதன் கீழ் அமைந்த இந்த சிவலிங்கம், ஒரு நாளில் மூன்று வேளைகளில் மூன்று நிறங்களுக்கு மாறுகிறது. இந்த அதிசய நிகழ்வு, வருடத்தில் அனைத்து நாட்களும் நடைபெறுவதுதான் கூடுதல் சிறப்பு.

காலை நேரத்தில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த சிவலிங்கம், நண்பகலில் காவி நிறத்தில் காட்சி தருகிறது. இரவில் இதன் நிறம் கருமையாக மாறி விடுகிறது. மறுநாள் காலை சிவலிங்கம் மீண்டும் சிவப்பு நிறமாக காட்சியளிக்கும்.

புராண முக்கியத்துவம் :

 அட்சலேஷ்வர் மகாதேவர் ஆலயம் கட்டப்பட்ட காலத்திலேயே இந்த சிவலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். அடி முடி காண முடியாதவர் சிவபெருமான் என்பதை உணர்த்தும் விதமாக, இந்த சிவலிங்கம், ஆயிரம் அடிகளையும் தாண்டி, தரைக்கு கீழே புதையுண்டு இருப்பதாக நம்பப்படுகிறது. சிவபெருமான் பூலோகத்தில் கால் பதித்த ஒரே இடம் இதுதான் என்று இந்த ஆலய தல வரலாறு சொல்கிறது.

நம்பிக்கைகள்:

 இந்த ஆலயத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு, மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணை அமையும் என்பதும் பெரும்பாலானவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்:

                காலை நேரத்தில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த சிவலிங்கம், நண்பகலில் காவி நிறத்தில் காட்சி தருகிறது. இரவில் இதன் நிறம் கருமையாக மாறி விடுகிறது. வருடத்தில் அனைத்து நாட்களும் நடைபெறுவதுதான் கூடுதல் சிறப்பு.

காலம்

1200 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தோல்பூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தோல்பூர்

அருகிலுள்ள விமான நிலையம்

ஜெய்ப்பூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top