தேவூர் தேவ துர்க்கையம்மன் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
தேவூர் தேவ துர்க்கையம்மன் திருக்கோயில்,
தேவூர்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611109.
இறைவி:
துர்க்கையம்மன்
அறிமுகம்:
நாகை மாவட்டத்தில் தேவூர் எனும் கிராமத்தில் கிழக்கு நோக்கி தனி கோயில் கொண்டு சாந்த சொரூபிணியாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள் துர்க்கையம்மன் முன்னால் சிலா ரூபத்திலும், பின்னால் சுதை உருவிலும் காட்சி தரும் அன்னையை இங்கே காணலாம். வேண்டுவோர் கோரிக்கையை விரைவாக இயற்றுவதில் வல்லவர் என்கிறார்கள் பக்தர்கள். நாகப்பட்டினம்-திருவாரூர் வழித் தடத்தில் மையமாக உள்ள கீழ்வேளூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் தேவூர் உள்ளது. கீழ்வேளூர் ஊரில் இருந்து ஆட்டோ வசதி எந்நேரமும் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
கோயிலின் உள்ளே செல்லும் முன் வலதுபுறம் ராகவேந்திரரும், இடதுபுறம் மகா அவதார் பாபாஜியும் தரிசனம் தருகின்றனர். சிறிய அளவிலான பிரகாரத்தில் 18 சித்தர்களும் வடக்கு நோக்கி ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளனர். பிரகாரத்தின் இடது மூலையில் வெற்றி விநாயகர் பாலமுருகன் எழிலுடன் காட்சி தருகின்றனர். பிரகாரத்தின் வலது பக்கத்தில் பாலா ஆஞ்சநேயரும் பிரகாரத்தை விட்டு வெளியே வரும்போது நவகிரக நாயகர்களை தரிசனம் காணலாம்.
நம்பிக்கைகள்:
ராகுவின் அதிதேவதை துர்க்கை அம்மன் என்பதால் செவ்வாய் வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோவிலில் ராகு கால பூஜைகள் விசேஷமாக நடைபெறுகிறது. திருமணம் தள்ளி போகிறவர்களும், புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த பூஜையில் கலந்துகொண்டு 9 எலுமிச்சை பழங்களின் தீபம் ஏற்றி 9 வாரங்கள் தொடர்ந்து அம்பாளை வழிபட்டு வந்தால் அவர்கள் தேவைகளை நிறைவேற்றித் தருகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தனி சன்னதியில் உள்ள பைரவருக்கு அஷ்டமி தினங்களில் நடக்கும் பூஜையில் கலந்து கொண்டால் கண்ட சனி, பாத சனி, ஏழரை சனி, அஷ்டம சனி உள்ளிட்ட சனி தோஷங்களின் தாக்கம் குறையும் என்கின்றனர். தீவினைகளாகிய பில்லி. சூனியம் போன்றவற்றாலும் மன அமைதியின்மையால் அல்லல்படுவோர் அமாவாசை அன்று இக்கோயிலில் நடைபெறும் நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டால் நற்பலன் கிடைக்கும். முன்னோர் ஆசி பெற வேண்டுவோர் பவுர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் இங்கு நடைபெறும் சித்தர்கள் பூஜையில் கலந்து கொள்கின்றனர்.
திருவிழாக்கள்:
கிருத்திகை, ஆடிப்பூரம், நவராத்திரி, மகா சிவராத்திரி மற்றும் ராகு கேது பெயர்ச்சி தினங்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடக்கின்றன
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தேவூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி