Friday Jan 10, 2025

தீண்டாக்கல் வீரபாண்டீஸ்வரர் கோயில், திண்டுக்கல்

முகவரி :

தீண்டாக்கல் வீரபாண்டீஸ்வரர் கோயில்,

தீண்டாக்கல், குஜிலியம்பாறை தாலுகா,

திண்டுக்கல் மாவட்டம் – 624620.

திரு. ராஜலிங்கம் +91 72002 98816 

இறைவன்:

வீரபாண்டீஸ்வரர்

இறைவி:

விசாலாட்சி

அறிமுகம்:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா, கூடலூர் பக்கத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில் 55கிமீ துரத்தில் கூடலுர் எனும் ஊருக்கு கிழக்கே அருகே 4கிமீ தூரத்தில் தீண்டாக்கல் மலைக்கோவில் அமைந்துள்ளது. கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த “பாண்டியன் பராங்குசன்”  காலத்தில் தீண்டாக்கல் வீரபாண்டீஸ்வரர் கோவில் திருப்பணி செய்துள்ளனர்.

புராண முக்கியத்துவம் :

            கோவிலின் சுவர்கள் கற்களாலும் விமானம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. விமானம் அறுங்கோன வடிவத்தில் இருக்கு, இக்கோவில் கட்டும் முன்பே ஒரு மாதிரி வரைபடம் செதுக்கியுள்ளனர். இதை கோவிலின் வடமேற்கில் பின்புறமாக கோட்டுப் படங்களாக வரைந்து வைத்துள்ளனர். கோவிலுக்கு வெளியில் விநாயகர் சன்னதி, தெற்கு பார்த்து தட்சிணா மூர்த்தி சுவாமியும் உள்ளனர். கோவிலுக்கு வடக்கு பகுதியில் முருகன் மற்றும் சண்டேஸ்வரர் சன்னதியும் இருக்கு. இந்த பிரகாரத்தில் வேறு வேறு காலங்களில் செய்வித்த கட்டுமானங்களை காண முடிகிறது. 

    கிழக்கு பார்த்து அமைந்திருக்கும் வீரபாண்டீஸ்வரர் சிவன் கோவிலுக்கு நுழை வாயில் தெற்கு பக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக மூலவரில் இடது பக்கம் முருகனும், வலது பக்கம் விநாயகரும் அமைக்கப் பட்டிருக்கும், ஆனா இக்கோவிலில் மட்டும் மிக அரிதான அமைப்பில் வலது பக்கமாக மிக சிறிய அமைப்பில் இரட்டைப் பிள்ளையார் இருக்கிறது.

     கோவிலின் அர்த்த மண்டபத்தில் மேலே இரட்டைக் கயல் சின்னங்களை புடைப்புச் சிற்பங்களாக வடித்துள்ளனர். அம்பாள் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் மீனாட்சி அம்பாள் போன்ற வடிவத்தையும் கொண்டு அருள்பாளிக்கிறார். கிழக்குப் பார்த்து மூலவர் வீர்பாண்டீஸ்வரர் அமைந்திருக்கிறார்.     கோவிலின் வெளியே கிழக்கு பகுதியில் உயரமான விளக்குத் தூண் கொடிமர அமைப்பில் உள்ளது. கொடிமரத்தை சுற்றிலும் நந்தி, விநாயகர், பசுபதீஸ்வரர் மற்றும் முருகன் சிற்பங்கள் பொறித்துள்ளனர். 

 மலையின் அடிவாரத்தில் பராமரிப்பின்றி இருக்கும் மிகப்பெரிய தோ் பார்க்க முடியும். தேரில் அழகிய வேலைப்பாட்டுடன் சிலைகளையும் காணடமுடியும். மிகப்பெரிய தோ் சக்கரங்களும், அச்சுகளும் இக்கோவிலின் பிரம்மாண்டத்தை உணர்த்துகிறது. நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் இத்தேர் அமைக்கப்பட்டு, கோவில் திருப்பணியும் செய்துள்ளனர். 

திருவிழாக்கள்:

                             பெளர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் மற்றும் அனைத்து விஷேச நாட்களிலும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கோவிலின் மேலேயே அன்னதானம் நடைபெறுவது இன்னும் விசேசமான ஒன்று.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தீண்டாக்கல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திண்டுக்கல்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top