திருச்சிறுபுலியூர் அருள்மாகடல் (தலசயன) பெருமாள் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
கிருபாசமுத்திரப் பெருமாள் திருக்கோயில், சிறுபுலியூர், கொல்லுமாங்குடிஅஞ்சல்,நன்னிலம்வட்டம், திருவாரூர்மாவட்டம்-609 403. போன்: 04366-233041 (அர்ச்சகர்
இறைவன்
இறைவன்: அருள்மாகடல், தலசயன பெருமாள் இறைவி: தயா நாயகி
அறிமுகம்
திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்த 108 திவ்ய தேசங்களில் இருபத்தி நான்காவதாகும். தெற்கு நோக்கி காட்சி தரும் கோயிலின் மூலவர் பெயர் ஸ்தலசயனப்பெருமாள். தாயார் பெயர் திருமாமகள் நாச்சியார். உற்சவர் பெயர் கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) – உற்சவ தாயார் பெயர் தயாநாயகி. தீர்த்தக் குளம் – மானஸ புஷக்ரிணி. விமானம் – நந்தவர்த்தன விமானம். கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியாசர், வியாக்கிரபாதர், கங்கையுடன் காட்சியளிக்கிறார். திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட கோயில் ஆகும்.
புராண முக்கியத்துவம்
முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் பகை ஏற்பட்டது. இந்த பகை நீங்க ஆதிசேஷன் இத்தல பெருமாளை நோக்கி தவம் இருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மாசி மாதம், வளர்பிறை ஏகாதசி தினத்தன்று ஆதிசேஷனுக்கு காட்சி கொடுத்தார். அத்துடன் ஆதிசேஷனை அனந்த சயனமாக்கி கொண்டு, குழந்தை வடிவில் சயன கோலத்தில் சேவை சாதிக்கிறார். பெயர்க்காரணம்: புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் வழிபட்டதாலும், பெருமாள் அவருக்கு பாலனாக சயன கோலத்தில் காட்சி தந்ததாலும் இத்தலம் “திருச்சிறுபுலியூர்’ எனப்படுகிறது. சிதம்பரம் நடராசர் அருளியபடி வியாக்கிரபாதர், திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப்பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் இத்தலத்திற்கு திருச்சிறுபுலியூர் எனப் பெயராயிற்று.
நம்பிக்கைகள்
தென்னகத்தில் இவ்விடத்தில் மட்டும்தான் விஷ்ணுபாதங்கள் உள்ளன. கன்வமகரிஷி மோட்சம் அடைந்த இடமாம் இது. சர்வதோஷ பரிகார ஸ்தலம் இது.
சிறப்பு அம்சங்கள்
குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மாங்கல்ய தோஷம், கால சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், பாலாரிஷ்ட தோஷம், திருமணத்தில் தடை, நவக்கிரக பரிகாரம் செய்ய இருப்பவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு. தீராத நோய், மன நல பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.
திருவிழாக்கள்
சித்திரை பிறப்பு, வைகாசி பிரமோற்சவம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், கோகுலாஷ்டமி, நவராத்திரி பவித்ர உற்சவம், ஐப்பசி மூலத்தில் மணவாள மாமுனிகள் உற்சவம், திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மகர சங்கராந்தி, மாசி சுக்லபட்ச ஏகாதி, பங்குனி உத்திரம்,
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருச்சிறுபுலியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி