Friday Dec 27, 2024

செங்காலி மாலை பலன்கள்

ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள் தெய்வங்களை வழிபடும்போது சில மாலைகளை கழுத்தில் அணிந்து கொண்டு வழிபடுவார்கள். அதிலும் குறிப்பாக சிவபெருமானுக்கு உரிய மாலையாக ருத்ராட்ச மாலையும் சபரிமலைக்கு ஐயப்பனுக்கு உரிய மாலையாக துளசி மாலையும் முருகனுக்கு உகந்த மாலை ஆக சந்தனமாலையும் திகழ்கிறது என்று கூறலாம். இந்த மாலைகளோடு மட்டுமல்லாமல் இன்னும் பிற மாலைகளை அணிந்து கொள்வதால் பல நன்மைகள் நம் வாழ்வில் ஏற்படும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் செங்காலி மாலையை அணிவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றி தான் பார்க்கப் போகிறோம். தெய்வீக சக்தி நிறைந்த மரங்களில் இருந்து மாலைகள் தயாரிக்கப்படுகிறது. அந்த மாலைகளை முறையாக பயன்படுத்தினால் அந்த மாலைக்குரிய தெய்வீக சக்தி கிடைக்கும் என்று முழுமையாக நம்பப்படுகிறது. அந்த வரிசையில் மிகவும் முக்கியமான மரமாக கருதப்படுவது தான் செங்காலி மரம் கருங்காலி மரத்தைப் போலவே செங்காலி மரமும் இருக்கும். கருங்காலி மரம் கருப்பாக இருக்கும். செங்காலி மரம் சிவப்பாக இருக்கும்.

கருங்காலி மாலைக்குரிய அனைத்து விதமான பயன்களும் செங்காலி மாலைக்கும் இருக்கிறது. சொல்லப்போனால் கருங்காலி மரத்தை விட ஒரு படி மேலே செங்காலி மரம் திகழ்கிறது என்று கூட சொல்லலாம். செங்காலி மாலையையோ அல்லது செங்காலி கட்டையையோ யார் ஒருவர் தங்கள் கைவசம் வைத்திருக்கிறார்களோ அவர்களிடம் தெய்வீக சக்தி என்பது அதிகரிக்கும். மேலும் உயிர் சக்தியை பேணிப் பாதுகாக்கும். எதிர்பாராத விபத்துக்கள் நேர்வதை தடுக்கும். நோய்களிலிருந்து வெளி வருவதற்கு உதவும். மேலும் புதிய நோய்கள் எதுவும் ஏற்படாமலும் பாதுகாக்கும். குழந்தை பேரின்மைக்காக அந்த காலத்திலேயே செங்காலி மரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். செங்காலி மரத்தில் கட்டில் செய்வதன் மூலம் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இருப்பவர்களுக்கு செங்காலி மரக்கட்டையையோ அல்லது மாலையோ கட்டிலில் போட்டு வைப்பதன் மூலம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மேலும் அந்த காலத்தில் குழந்தைகளுக்கு தொட்டில் செய்யும் பொழுது செங்காலி மரத்தில் தொட்டில் செய்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் செங்காலி மரத்தை எந்தவித விஷ ஜந்துகளும் நெருங்காது என்பதுதான். விஷ ஜந்துகளை விட ஒரு சிறிய எறும்பு கூட செங்காலி மரத்திற்கு அருகில் வர முடியாது என்பதால் குழந்தைகளை பாதுகாக்கும் பாதுகாப்பு கவசமாக செங்காலி மரம் திகழ்ந்து இருக்கிறது. நம் வாழ்க்கையில் நாம் இழந்த எதுவாக இருந்தாலும் நமக்கு அது திரும்பவே கிடைக்காது என்ற சூழ்நிலை ஏற்பட்டு நம் மனம் தளர்ந்தாலும் செங்காலி கட்டையையோ அல்லது மாலையையோ நம்மிடம் வைத்துக் கொண்டு தெய்வத்தை வழிபட்டு வழிபட்டால் வரவே வராது என்ற நினைத்த விஷயங்களும் நம்மை தேடி வரும். அது பணமோ, நகையோ, உறவோ எதுவாக இருந்தாலும் நம்மை தேடி வரும். செங்காலி மரம் அதை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும் என்பதுதான் உண்மை.

மேலும் இந்த செங்காளி மாலையை பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு போடுவதன் மூலம் தெய்வீக சக்தி அந்த குடும்பத்தில் அதிகரித்து எந்த வித தீய சக்திகளும் அண்டாமல் நம்மை பாதுகாக்கும். அதனால் தான் அன்றைய காலத்தில் முனிவர்கள் தங்கள் கையில் இருக்கும் தண்டத்தை செங்காலி மரத்தால் செய்தார்கள் என்ற கூற்றும் நிலவி வருகிறது. இவ்வளவு அற்புதமான பலன்களை கொண்ட செங்காலி கட்டையையோ அல்லது மாலையையோ நாமும் பயன்படுத்தி நன்மைகள் பல அடைவோம்.

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top