Friday Jan 10, 2025

சந்திரபிரபா தீர்த்தங்கரர் திருக்கோயில், ஈரோடு

முகவரி

சந்திரபிரபா தீர்த்தங்கரர் திருக்கோயில், விஜயமங்கலம், ஈரோடு மாவட்டம்- 638056.

இறைவன்

இறைவன்: சந்திரபிரபா தீர்த்தங்கர்

அறிமுகம்

திருப்பூர் அருகே, 1,000 ஆண்டுகள் பழமையான சமணர் கோவில், பாரமரிப்பு இல்லாமல் அழிந்து வருகிறது. திருப்பூர் அருகே உள்ள விஜயமங்கலத்தில், சமண மத கோவிலான, சந்திரபிரபா தீர்த்தங்கரர் கோவில், மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில், கொங்கு நாட்டு சமண தலங்களின் தலைமை பீடமாக இருந்துள்ளது.மைசூரு அரசின் அமைச்சர் சாமுண்டராயரின் தங்கை, புளியம்மை, கொங்கு நாட்டு சிற்றரசரான, ஜைன கவிக்கு திருமணம் செய்து வைத்து உள்ளார்.முக்தி பெறுவதற்காக, விரதம் இருந்து உயிர் நீக்கும் பழக்கம், சமண மதத்தில் இருந்ததால், புளியம்மை, விஜயமங்கலத்தில், விரதம் இருந்து உயிர் நீத்துள்ளார். அவரது நினைவாக, இக்கோவில் கட்டப்பட்டது. மூலவராக, எட்டாவது தீர்த்தங்கரர் சந்திரபிரபா, சிம்ம வாகனத்தில் அமர்ந்து, தியான நிலையில் மகாவீரர் சிலை, என, இரு கருவறைகளுடன் இருந்துள்ளது. மதிப்பு மிகுந்த இரண்டு சிற்பங்களும், 1991ல் திருடப்பட்டுள்ளன. கருவறை, முன் மண்டபம், மகா மண்டபம், ராஜகோபுரம், 40 அடி உயர தீப விளக்கு என, அற்புதமான கட்டடக் கலையில் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில், தமிழக அரசின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவில் சிதிலமடைந்து, பிரகாரம் முழுவதும் புதர்கள் மண்டி, பராமரிப்பின்றி, பாழடைந்து காணப்படுகிறது. இது குறித்து, வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர், ரவிக்குமார் கூறியதாவது: அற்புதமான நுணுக்கமான, அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் இக்கோவிலில் உள்ளன. ஒரு காலத்தில், சமண மதத்தின் வாழ்வியல் சிற்பங்கள், கல்வெட்டு சான்றுகள், செய்திகள் பராமரிப்பு இல்லாமல், அழிந்து வருகின்றன.பராமரிப்பு செய்யாவிட்டால், 1,000 ஆண்டுகள் பழமையான ஒரு வரலாற்று சான்று, விரைவில் அழிந்து விடும். இதில், மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

விஜயமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஈரோடு

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top