Sunday Nov 24, 2024

சங்கராம்ருதம் – 1008

ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம்
ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம்
லோக சங்கரம்
ஒரு முறை ஸ்ரீ மகாபெரியவா திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் முகாமிட்டிருந்தார். மகாபெரியவர் பாபநாசத்தில் முகாமிட்டிருக்கும் செய்தியைக் கேட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து
ஸ்ரீ மகாபெரியவாளை தரிசித்து அனுக்ரஹம் பெற்றுச் சென்றனர். மகாபெரியவா முகாமிட்டிருந்த இடத்திற்கருகே ஒரு பார்வையற்ற தம்பதியர் கையில் பார்வையில்லா கைக்குழந்தையுடன் பிக்ஷை எடுத்துக் கொண்டிருந்தனர்.சென்னையில் ஒரு மிகப்பெரிய செல்வந்தர்
ஸ்ரீ மகாபெரியவா முகாமிட்டிருக்கும் இடத்திற்கெல்லாம் சென்று
ஸ்ரீ மகாபெரியவாளின் அனுக்ரஹம் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்! பெரியவா பாபநாசத்தில் முகாமிட்டிருப்பதை அறிந்து அந்த செல்வந்தர் பாபநாசத்திற்கு வந்து மகாபெரியவாளின் அனுக்ரஹம் பெற்றுச்செல்ல வந்தார்! அந்த பிக்ஷையெடுக்கும் தம்பதி இந்த செல்வந்தரிடமும் பிக்ஷை கேட்டிருக்கிறது! அவ்வளவு தான்.ஆத்திரம் வந்தது அந்த மிகப்பெரிய தனவந்தருக்கு! கோபத்தில் அந்த தம்பதியை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு அவர்களை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு முகாமுக்குள் நுழைந்தார் அந்த செல்வந்தர்! ஸர்வமும் அறிந்த சர்வேஸ்வரனுக்கு இவர் செய்த காரியம் தெரியாதா என்ன? முகாமுக்குள்
ஸ்ரீ மகாபெரியவர் நிறைய பக்தர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்! இவரைக் கண்டுக்கவே இல்லை. கடைசியில் எல்லா பக்தர்களிடம் பேசிமுடிந்த பிறகு இவர் கையில் வைத்திருந்த தட்டில் புஷ்பங்கள், பழ வகைகள், மஞ்சள் குங்குமம் முதலிய பொருட்களுடன்
ஸ்ரீ மகாபெரியவாளிடம் சென்றார். மகாபெரியவாள் முன்பு எல்லாவற்றையும் சமர்பித்துவிட்டு பெரியவா,நான் சென்னையில் இருந்து உங்கள் தரிசனத்துக்கு வந்திருக்கேன்! நீங்க தான் என்னை ஆசீர்வாதம் பண்ணனும் என்றார்! அடுத்து என்ன நடக்கப்போகிறதென முகாமில் இருக்கும் பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கையில்
ஸ்ரீ மகாபெரியவாள் சற்றே அதிபயங்கரமான கோபத்துடன் முகாமுக்கு வெளியே பிக்ஷை எடுத்துக்கொண்டிருந்த தம்பதியை என்ன பண்ணே? அவ்வளவுதான்! ஆடிப்போய்விட்டார் அந்த செல்வந்தர். அடுத்து மகாபெரியவா என்ன சொல்லப்போகிறாரென ஆவலுடன் பக்தர்கள் கூட்டம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது! சாஷ்டாங்கமாக ஸ்ரீ மகாபெரியவா திருவடிகளில் வீழ்ந்து நமஸ்கரித்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார் அந்த செல்வந்தார்! ஸ்ரீ மகாபெரியவா கடுமையான கோபத்துடன் திருவாய் மலர்ந்தார்! ஏன்டா உன்னால அந்த பிக்ஷை எடுக்குற தம்பதிக்கு எதுவும் கொடுக்க முடியல்லைன்னா என்னால ஒன்னும் கொடுக்க முடியாதுனு சொல்லிட்டு போகவேண்டியது தானே முறை? அத விட்டுட்டு பாவம் அவாளை கண்டபடி திட்டுனது மட்டுமில்லாம அவாள அடிச்சு உதச்சிருக்கே! நீ செஞ்ச பாவத்துக்கு ப்ராயஸ்சித்தம் இல்லைனு சொன்னார் மகாபெரியவர்! அவ்வளவுதான் அரண்டுபோய்விட்டார் அந்த செல்வந்தர்! நா பெரிய பாவம் பண்ணிட்டேன் பெரியவா!செஞ்ச பாவத்துக்கு பரிகாரமே இல்லையா பெரியவானு அழ ஆரம்பித்துவிட்டார்! மகாபெரியவர் மனமிரங்கினார்! இந்த பாபநாசத்துல இருக்குற பாபவிநாசேஷ்வர ஸ்வாமிய இப்போவே போய் வணங்கு! அங்க உன் பாவத்துக்கு பரிகாரம் தேடிக்கோன்னு சொல்லிட்டார்! அடுத்த நொடியே பாபவிநாசேஷ்வர ஸ்வாமி கோவிலுக்குப் பறந்தார்! அங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ பாபவிநாசேஷ்வர ஸ்வாமியிடம் தான் செய்த பாவம் தீருவதற்கான பரிகாரத்தை வேண்டி தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்! அன்று இரவில் அந்த செல்வந்தரின் கனவில் ஸ்ரீ பாபவிநாசேஷ்வர ஸ்வாமியின் உருவத்தில்
ஸ்ரீ மகாபெரியவாளே தரிசனம் தந்தார்!
நீ உன் காலால் எட்டி உதைத்து அடித்த அந்த பார்வற்யற்ற பிக்ஷையெடுக்கும் தம்பதிக்கு எந்த விதத்திலாவது உபகாரம் செய்! அதுவே நீ செய்த பாவத்திற்கு பரிகாரமாகும் எனக் கூறிவிட்டு மறைந்தார்! அடுத்த நாள் காலையில் அந்த தம்பதியர் பிக்ஷையெடுக்கும் இடத்திற்கு அந்த செல்வந்தர் வந்தார்! பிக்ஷையெடுக்கும் இடத்திற்கு வந்தார்! பார்வையற்ற தம்பதியரை பார்த்தார்! தேம்பித் தேம்பி அழுதுகொண்டே அந்த பார்வையற்ற நபரின் கையைப் பிடித்துக்கொண்டே நான் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டேன்! நான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக உங்களுக்கு கண்பார்வை கிடைக்கும்பொருட்டு நானே உங்கள் மூவரின் கண்சிகிச்சைக்குச் செலவு செய்வேன்! நான் உங்களுக்கு தொழில் ரீதியிலாக உதவி செயயும் பாக்கியத்தை சாக்ஷாத் பாபவிநாசேஷ்வர ஸ்வாமியே எனக்கு அருளியிருக்கிறார் இதை நீங்கள் தயவு செய்து நிராகரித்துவிட வேண்டாம் எனக்கூறிக்கொண்டே தன்பையில் வைத்திருந்த 20லட்சம் ரூபாய்கான காசோலையைக் கொடுத்துவிட்டார்!
ஒரு மாதம் தன்னுடைய சென்னை வீட்டில் தங்க வைத்து அவர்களுக்குப் பார்வை கிடைப்பதற்கு உண்டான
முழு செலவையும் அந்த தனவந்தரே ஏற்றுக்கொண்டார்! தற்போது அந்தத் தம்பதி ஸ்ரீ மகாபெரியவாளின் அருட்கடாக்ஷத்துடன் எந்தவிதமான குறையுமின்றி சகலவிதமான செல்வங்களுடன் எகிப்து நாட்டில் வசித்து கொண்டிருக்கிறார்
பிக்ஷையெடுத்த தம்பதியை பெரும் செல்வந்தராக மாற்றிய மகாபெரியவாளின் அற்புதங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதென்பதே நிதர்சனமான உண்மை!
அபார கருணா சிந்தும்
ஞானதம் சாந்த ரூபிணம்
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top