உலகாபுரம் விஷ்ணு கோயில், விழுப்புரம்
முகவரி
உலகாபுரம் விஷ்ணு கோயில், உலகாபுரம், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம் – 604154.
இறைவன்
இறைவன்: விஷ்ணு
அறிமுகம்
சென்னையிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள திண்டிவனத்தில் இருந்து உப்புவேலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ தொலைவில் உள்ளது இந்த கிராமம். பெருமாள் கோயில் இவ்வூரின் மேற்குப் பகுதியில் உள்ளது. இக்கோயிலில் உள்ள முதலாம் இராஜேந்திர சோழன் கல்வெட்டில் இதற்கு முன்னர் இக்கோயிலுக்கு அளிக்கப்பெற்ற தானங்கள் கல்வெட்டாக பொறிக்கப்பட்ட செய்தி குறிப்பிடப்படுகிறது. இறைவனின் பெயர் ‘அரிஞ்சய விண்ணகர் வீற்றிருயத ஆழ்வார்’ எனக் கல்வெட்டில் கூறப்படுகிறது. இக்கோயிலில் உள்ள இராஜ மகேந்திரன் 3 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு சுயதர சோழப் பெரும்பள்ளி என்று அழைக்கப்பட்ட சமணக் கோயில் இருந்ததை தெரிவிக்கிறது. முதலாம் இராஜராஜனின் பட்டத்தரசியின் பெயரால் இவ்வூர் அமையதிருப்பதும், முதலாம் இராஜராஜ சோழனின் தந்தை சுயதர சோழனின் பெயரால் சுயதர சோழப் பெரும்பள்ளி என்ற சமணக் கோயில் ஒன்று இருந்ததும், இவ்வூர் அக்காலத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. இக்கோயில் சோழர் காலத்திய கட்டடக் கலைப் பாணியில் எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவை சோழர் காலத்தவை. பிற்காலத்தில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்திய கலைப்பாணியில் திகழ்கிறது
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உலகாபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திண்டிவனம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை