ஆனைமலை சமணக்கோயில், மதுரை
முகவரி
ஆனைமலை சமணக்கோயில், ஆனைமலை, நரசிங்கம், ஒத்தக்கடை, மதுரை மாவட்டம் – 625107
இறைவன்
இறைவன்: தீர்த்தங்கரர்
அறிமுகம்
ஆனைமலை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டம் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஒத்தக்கடை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மதுரைக்கு வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மதுரை ஒத்தக்கடை என்னும் சிற்றூரில் அமைந்துள்ள ஆனைமலை முக்கியமான சமண தலமாக, நெடுங்காலமாக இருந்துள்ளது. 9ம் நூற்றாண்டில், நரசிங்கமங்கலம் என்றழைக்கப்பட்ட இவ்வூர், தற்பொழுது அதன் நினைவெச்சமாக நரசிங்கம் என்றுள்ளது. இங்குள்ள குகைத்தளத்தில், 20 சமணர் கற்படுக்கைகளும், கி.பி 2ம் நூற்றாண்டு தமிழ் பிராமி கல்வெட்டும் உள்ளன.
புராண முக்கியத்துவம்
இம்மலையின் வடபுற சரிவில், தீர்த்தங்கரர்கள் மகாவீர், நேமிநாதர், பார்சுவநாதர், கோமடேஸ்வரர்(பாகுபலி), அம்பிகா இயக்கி ஆகியவர்களின் திருவுருவ சிலைகள் சுண்ணப்பூச்சுடன், மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் பல வண்ணங்களுடன் வடிக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் சமண சமயப் புராண கதைகள் கூறுவனவாக அமைக்கப்பட்டுள்ளது. இவை சித்தன்னவாசல் ஓவியங்களின் சம காலத்தவையாகும். சிற்பங்கள் கூறும் சமண சமயப் புராண கதை: பார்சுவனாதரை, கமடன் என்னும் அசுரன் பாறைகொண்டு தாக்குகிறான். அவரை காக்க தர்நேந்திரன் என்னும் ஐந்து தலை நாகம் மேலிருந்து காக்கின்றான். இருவரையும், பத்மாவதி இயக்கி தன்னுடைய வஜ்ர குடையால் காக்கின்றாள். தோல்வியுற்ற கமடன், பார்சுவனாதரின் தாமரை பதத்தில் சரணடைகின்றான். பாகுபலி தனது இரு சகோதரிகளுடன் உள்ளார். இந்த திருமேனிகளின் கீழே, 8 தமிழ் வட்டெழுத்து கல்வெட்டுகள், உருவாக்கியவர்கள் மற்றும் காத்து நின்றவர்களின் பெயர்களை தருகின்றன. இவற்றில் முக்கியமானது அச்சனந்தி செய்வித்த திருமேனி, நரசிங்கமங்கலத்து சபையோரால் பாதுகாக்கப்பட்டது. மேலும், புரவுவரி திணைக்களத்தார், பொற்கோட்டு காரணத்தார், பரிவார புரவுவரியார் போன்ற அரசியல் அதிகாரிகளும் இத்திருமேனிகளை காத்துள்ளனர்.
காலம்
9 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நரசிங்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை