Monday Dec 23, 2024

அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3) திருக்கோயில், திருக்கோளூர்

முகவரி

அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3) திருக்கோயில், திருக்கோளூர், ஆழ்வார்திருநகரிவழி, தூத்துக்குடிமாவட்டம் – 628 612.

இறைவன்

இறைவன்: வைத்தமாநிதிப் பெருமாள் இறைவி: குமுதவள்ளி

அறிமுகம்

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் என்பது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றும், நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியுமாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் நிசேபவித்தன், வைத்தமா நிதிப்பெருமான். இறைவி: குமுதவல்லி, கோளுர் வள்ளி. தீர்த்தம்: குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம்(தாமிரபரணி). விமானம்: ஸ்ரீகர விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது. நம்மாழ்வார் மட்டும் 12 பாடல்களாலும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர். இவ்வூர் மதுரகவியாழ்வார் பிறந்த தலமாகும். இறைவன் செல்வத்தைப் பாதுகாத்து அளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் இங்கும், சோழ நாட்டு வைணவத் திருத்தலமான திரு ஆதனூரில் ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயிலில் மட்டுமே காணப்படுகிறார் தீர்த்தம்:தாமிரபரணி, குபேர தீர்த்தம் புராண பெயர்:திருக்கோளூர்

புராண முக்கியத்துவம்

பார்வதியால் குபேரனுக்கு சாபம் ஏற்படுகிறது. இதனால் அவனிடமிருந்து நவநிதிகள் விலகுகின்றன. இவனிடமிருந்து விலகியநவநிதிகள் நாராயணனிடம் போய் சேருகின்றன. நாராயணன்இந்த நிதிகளை பாதுகாத்து வைத்திருந்ததால் அவருக்கு “வைத்தமாநிதி’ என்ற திருநாமம் ஏற்பட்டது. பெருமாளே இத்தலத்தில் தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம். குபேரன் இத்தல பெருமாளை வழிபட்டு மீண்டும் நவநிதிகளை பெற்றான் என புராணங்கள் கூறுகின்றன. இத்தல பெருமாளுக்கு அதர்மபிசுனம் என்ற பெயரும் உண்டு.

நம்பிக்கைகள்

நவக்கிரக தோஷங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவுடன் பெருமாளுக்கு வஸ்திரம் சாத்தி, அர்ச்சனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 87 வது திவ்ய தேசம்.நவதிருப்பதியில் இது 3 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது செவ்வாய் ஸ்தலமாகும். பெருமாள் இத்தலத்தில் தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம். இங்குள்ள விமானம் ஸ்ரீகர விமானம்.சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்க தலங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரக தலங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங் களாக செயல்படுவதால் நவகிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி 1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம் 2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்) 3. செவ்வாய் : திருக்கோளுர் 4. புதன் : திருப்புளியங்குடி 5. குரு : ஆழ்வார்திருநகரி 6. சுக்ரன் : தென்திருப்பேரை 7. சனி : பெருங்குளம் 8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லிமங்கலம்) 9. கேது : 2 . இரட்டைத் திருப்பதி இங்கு பெருமாள் சந்திர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்கோளூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தூத்துக்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top