அருள்மிகு திருப்பிரமீஸ்வரமுடையார் சிவன் கோயில், S.நறையூர்
முகவரி
அருள்மிகு திருப்பிரமீஸ்வரமுடையார் சிவன் கோயில், S.நறையூர், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் – 606 108.
இறைவன்
இறைவன்: திருப்பிரமீஸ்வரமுடையார்
அறிமுகம்
கடலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லை இந்த நறையூர் தான். சுமார் 112கிமி தூரத்தில் உள்ளது. தற்போது S.நறையூர் எனப்படுகிறது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் வந்து சேலம் சாலையில் சிறுபாக்கம் சென்று அங்கிருந்து அதன் மேற்கில் இரண்டு கிமி தூரத்தில் உள்ள நறையூர் அடையலாம் வணிக பெருவழிப்பாதையில் அக்காலத்தில் அமைந்திருந்த இவ்வூரின் சிவாலயத்திற்கு வணிகர்கள் முதலாம் ராஜராஜன் காலத்தில் கொடை கொடுத்த கல்வெட்டு தகவல்கள் இங்குள்ளன. மேலும் இரண்டாம் ராஜாதி ராஜன் கல்வெட்டு தகவல் மலாடாகிய ஜனநாத வளநாட்டு நறையூர் கூற்றத்து நறையூர் என சொல்லப்படுகிறது அதனால் இவ்வூர் தலை நகரமாக இவ்வூர் விளங்கியது என்பதில் ஐயமில்லை. இன்றோ ஆங்காங்கே வயல்களும், வெண்மணல் புழுதி பறக்கும் கருவேலங்காடுகளும் மட்டுமே எஞ்சி நிற்கும் ஒரு சிறு கிராமம்.
புராண முக்கியத்துவம்
இறைவன்- திருப்பிரமீஸ்வரமுடையார் , இறைவி பெயர் அறியமுடியவில்லை. இறைவன் கருவறை முற்றிலும் இடிந்து- இடிக்கப்பட்டு உள்ளது. இவரே இங்குள்ள மணல் மூட்டைகளின் உள் பொதிக்கப்பட்டிருக்கிறார். மேற்கு நோக்கிய இறைவன் கருவறை அதன் முன் அர்த்தமண்டபம் முகப்பு மண்டபம் உள்ளது அதில் நந்தியின் சிலை உள்ளது. இறைவன் திருக்கோயிலின் வடக்கில்(இறைவனுக்கு வலது புறம்) இந்த மண்டபங்களை ஒட்டியவாறே அம்பிகையின் கோட்டம் கிழக்கு நோக்கி உள்ளது. அரிதான இந்த ஒட்டிபிறந்த இந்த மண்டப கட்டுமானம் நான் பார்த்தவரை (Apprx 1280 temples) இல்லை எனினும் இந்த அம்பிகை கோட்டம் சற்று பிற்காலமே. இங்குள்ள கோட்டத்து தெய்வங்களும், பிரகார தெய்வங்களும் தனி கொட்டகையில் உள்ளன. (பாதுகாப்பு கருதி படங்கள் வெளியிடவில்லை) கோயில் எண்களிட்டு பிரிக்கப்பட்டிருக்கிறது ஆனால் பணிகள் தொய்வடைந்தது உள்ளது. கோயிலுக்கு வடக்கில் தனியாக ஒரு கல்வெட்டு மயிலின் படத்துடன் உள்ளது. விரைவில் பணிகள் நிறைவேற அந்த உருவமில்லா பரம்பொருளை வேண்டுவோம். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிறுபாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திட்டக்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி