அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், சிவப்பள்ளி
முகவரி
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருசெம்பள்ளி, செம்பனார்கோவில் அஞ்சல், மயிலாடுதுறை வழி, நாகப்பட்டினம் மாவட்டம் – 609309
இறைவன்
இறைவன்: கைலாசநாதர்
அறிமுகம்
தற்போதுள்ள திருச்செம்பள்ளி என்று இப்பகுதி வழங்குகின்றது. செம்பொன்னார் கோயிலின் ஒருபகுதி. திருச்சிவன்பள்ளி – திருச்சிவன்பள்ளி என்று மாறி இன்று திருச்செம்பள்ளி என்றாகியுள்ளது. கோயில் முழுவதும் அழிந்துவிட்டது. அவ்விடத்தில் தற்போது ஊராட்சி மன்றக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்த மூர்த்தங்களாகிய கைலாசநாதர், பார்வதி, வீரபத்திரர், சண்டேசுவர் ஆகிய நான்கும் இவ்வூரிலுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மகா மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தட்சன் செய்யும் யாகத்திற்கு உமையம்மை கைலாயத்தில் இருந்து வந்தபோது முருகனும் உடன் வந்ததாகவும், அங்கு தட்சனால் அவமானப்படுத்தப்பட்ட உமை கோபித்துக் கொண்டு செல்ல, முருகன் இங்கு தங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே சிவப்பள்ளி தரிசனம், இக்குமரன் கோயிலுக்கு வந்து அருள்மிகு கைலாசநாதர், பார்வதியைத் தரிசிக்கும் அளவில் பூர்த்தியாகிறது. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்பு தலமாகும்.
புராண முக்கியத்துவம்
வீரபத்தரரின் சிரசில் சிவலிங்கமும் திருவடிக்கீழ் தக்கன் உருவமும் காட்சி தர கையில் வாளேந்தி (வீரபத்திரர்) காட்சியளிக்கின்றார். இங்கிருந்து சற்று தொலைவில் திருப்பறியலூர் உள்ளது; தக்கனைச் சம்ஹரித்த வீரட்டத் தலம். வீரபத்திரர் இவ்வழியாகச் சென்றதாகக் கூறுகின்றனர்.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அக்கூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி