அருள்மிகு கயிலாயநாதர் திருக்கோயில், ஆறைமேற்றளி – (திருமேற்றளி)
முகவரி
அருள்மிகு கயிலாயநாதர் திருக்கோயில், திருமேற்றளி, பட்டீஸ்வரம் – அஞ்சல் – 612703, கும்பகோணம் (வழி) வட்டம், தஞ்சை மாவட்டம்.
இறைவன்
இறைவன்: கயிலாய நாதர். இறைவி: சபள நாயகி
அறிமுகம்
இன்று திருமேற்றளி என்று வழங்குகிறது. மக்கள் பேச்சு வழக்கில் ‘திருமேற்றளிகை’ என்றும் சொல்கின்றனர். கும்பகோணம் – தாராசுரம் – பட்டீச்சரம் வழியாக பாபநாசம், தஞ்சாவூர் செல்லும் சாலையில், சாலையோரத்தில் கோயில். சுற்றிலும் செடி கொடிகள். சிறிய கோயில். சுவாமி கருவறை விமானம் மட்டுமே கோயிலாகவுள்ளது. கோபுர அமைப்பே இல்லை. உள்ளே சுவாமி, அம்பாளைத்தவிர வேறெதுவுமில்லை. காமதேனுவின் புதல்வியருள் ‘சபளி’ என்பவள் பூஜித்தது. (ஏனையவை பட்டி பூஜித்தது – பட்டீச்சரம், விமலி பூஜித்தது – பழையாறை வடதளி, நந்தினி பூஜித்தது – முழையூர்) நித்திய வழிபாடே சரிவர நடைபெறவில்லை. திருவலஞ்சுழியிலிருந்து குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்துவிட்டுப் போவார். இந்நிலையில் சிறப்பு வழிபாடுகள் / உற்சவங்கள் பற்றி நினைக்கவே இடமில்லை. எவ்விதப் பராமரிப்பும் இன்றிக் கோயில் சீரழிந்துள்ளது. அனி மாதம் முதல் நாள் பட்டீச்சரப் பெருமான் பல்லக்கு உற்சவத்தில் இவ்வூருக்கு வந்து செல்வார். இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருமேற்றளி
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சையூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி