அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோவில், திருச்சிராப்பள்ளி
முகவரி
அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோவில் என் அந்தர் செயின்ட், மலைக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு 620002
இறைவன்
உச்சிப்பிள்ளையார்
அறிமுகம்
உச்சிப்பிள்ளையார் கோயில் தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும். 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. (இப்பாறைக்கு மலைக் கோட்டை எனவும் பெயர் உண்டு.) இக்கோயில் மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும். பானை செய்யும் குயவனின் சிறுவன் தந்தையைப் போல விளையாடுகையில் பானை செய்யும் சக்கரத்தில் வைத்த பச்சைமண் உருண்டை போல் இந்த மலை இருந்ததாம். இதன் அரசன் சோழன் நலங்கிள்ளி என்று புலவர் கோவூர் கிழார் உச்சி பிள்ளையார் கோயில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்து கோவிலாகும், இது விநாயகர் என்னும் பிள்ளையாருக்காக கட்டப்பட்டது. இது தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டையின் உச்சியில் அமைந்துள்ளது. புராண கதைகளின்படி திருவரங்கத்தில் அரங்கநாதர் கோயில் கட்டிய பிறகு மன்னர் விபீஷணனிடமிருந்து விநாயகர் ஓடி வந்த இடமாக இந்த மலை உச்சி உள்ளது.மலைக்கோட்டை கோயிலானது பாறையின் மேல் 83 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த பாறை உலகின் மிக பழமையான பாறைகளில் ஒன்றாக இருக்கிறது. மென்மையான இந்த பாறையானது முதன்முதலில் பல்லவர்களால் வெட்டப்பட்டது. பிறகு இக்கோயில் மதுரை நாயக்கர்களால் விஜயநகர ஆட்சியின் கீழ் முழுவதுமாக நிறைவு செய்யப்பட்டது. இந்த கோயிலானது மலை பாறையின் உச்சியில் அமைந்துள்ளது. அதனால் தான் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் என்ற பெயர் பெற்றது.
புராண முக்கியத்துவம்
திருச்சியின் மிகப்புகழ் வாய்ந்த அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. இது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 275 அடி உயர மலையின் மேல் அமைந்துள்ளது. மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த உச்சி பிள்ளையார் கோவிலில் 100 கால் மண்டபம், விமானம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. மலைக்கோட்டையின் மீது இருந்து பார்க்கையில், திருச்சி மாநகரின் எல்லா பக்கமும் ரம்மியமாக இப்படி வடிவமைக்கப்பட்ட கோயிலின் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு வாய்ந்தது. திருச்சி மலைக்கோட்டை கடந்த 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது. இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தியா திரும்பிய இராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக இராமர், விபீசணனுக்கு இரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் இராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார். விபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், இரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார். சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், இரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக்கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் கொட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது. இக்கதைக்கேற்றபடி, இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் ஒரு வீக்கம் இருப்பதைக் காணலாம்.
நம்பிக்கைகள்
எந்த காரியங்கள் தொடங்கினாலும் இத்தல விநாயகரை வணங்கி விட்டு தொடங்கினால் காரியங்களில் வெற்றி உறுதி
சிறப்பு அம்சங்கள்
இக்கோவிலில் பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69 வது தேவாரத்தலம் ஆகும். மலைக்கோட்டை உச்சியில் உச்சி விநாயகரும், மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளியிருப்பது மிக சிறப்பு. பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.
திருவிழாக்கள்
சித்திரையில் பிரம்மோற்ஸவம், பங்குனியில் தெப்ப உற்சவம், ஆடிப்பூரம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மகரசங்கராந்தியன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு வைபவம், சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, ஆங்கிலப்புத்தாண்டு, தமிழ்புத்தாண்டு, பொங்கல். அருகிலுள்ள நகரம் : திருச்சி.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மலைக்கோட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சிராப்பள்ளி