அரங்கூர் அருணாச்சலேஸ்வரர் சிவன் கோயில்
முகவரி
அரங்கூர் அருணாச்சலேஸ்வரர் சிவன் கோயில், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் – 606 106.
இறைவன்
இறைவன்: அருணாச்சலேஸ்வரர் இறைவி: அபிதகுஜ நாயகி
அறிமுகம்
அரங்கூர் – அரங்கன் இருக்கும் ஊர், ஒரு பெருமாள்கோயில், கிருஷ்ணர்கோயில், சிவன்கோயில் என மூன்றும் உள்ளது. இது மட்டுமல்லாது ஒரு பிள்ளையார் கோயில் சிவாலயம் தனித்து ஒரு ஏக்கர் பரப்பில் உள்ளது. விநாயகர், இறைவன், இறைவி கோயில்கள் கிழக்கு நோக்கி உள்ளன. முருகன் கோயில் மட்டும் வித்தியாசமாய் மேற்கு நோக்கி உள்ளது. கோயில் கருங்கல் கட்டுகற்க்களால் கட்டப்பட்ட கோயில் விமானம் மட்டும் செங்கல் பணிகள் அதனால் பல இடங்களில் செடிகள் முளைத்து சேதமாகிக்கொண்டிருக்கிறது. உழவார பணி மக்கள் உதவ வேண்டுகிறேன். இறைவன் அருணாச்சலேஸ்வரர் இறைவி- அபிதகுஜ நாயகி கோயிலுக்கு நேர் பின் புறம் வடக்கு நோக்கிய துர்க்கை போன்ற ஒரு அம்மன் சன்னதி அதுவும் பாழ்பட்டுள்ளது. இவ்வாறு கோயில்கள் பாழ்பட்டு போவதற்கு ஊர்காரகள் மட்டும் காரணம் என்று ஒதுகிவிடமுடியாது, மறைமுகமாய் நாம் ஒவ்வொருவருமே காரணம் ஆகின்றோம். எப்படிஎன்றால் குறிப்பிட்ட ஒரு சில பெருநகர கோயில்களுக்கு மட்டுமே நாம் திரும்ப திரும்ப செல்கிறோம், இப்படி செல்வதால் அவ்வூரில் கூடுதல் கூட்டம், சுகாதார கேடு, வாகன நெரிசல் இப்படி பல இடையூறுகள் அவ்வூரில் ஏற்ப்படுகிறது. இது போன்ற கிராம கோயில்களை பாராமுகமாக நாம் இருப்பதால் சிறு ஊர்களின் வளர்ச்சி தடைபடுகிறது, அவ்வூர் மக்கள் குறிப்பாக சிவாச்சாரியார்கள், பட்டர்கள் பிழைப்பு தேடி வெளியூர் இடம்பெயர்கிறார்கள். பூசனை நின்று போகிறது காலப்போக்கில் கோயில் மூடப்படுகிறது, சிலைகள் களவாடப்படுகின்றன. இனி வரும்காலங்களிலாவது கிராம கோயில்களை தரிசிப்போம் கிராம வளர்ச்சிக்கு உதவுவோம். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அகரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பெண்ணாடம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி