Friday Jan 10, 2025

அம்பாசமுத்திரம் வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில்,

அம்பாசமுத்திரம்,

திருநெல்வேலி மாவட்டம் – 627 401.

போன்: +91- 99525 01968.

இறைவன்:

வீரமார்த்தாண்டேஸ்வரர்

இறைவி:

நித்யகல்யாணி

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ள வீர மார்த்தாண்டேஸ்வரர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் வீர மார்த்தாண்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். உற்சவர் சோமாஸ்கந்தர். அம்மன் நித்ய கல்யாணி என்று அழைக்கப்படுகிறார். தீர்த்தம் என்பது ஹரிஹர தீர்த்தம்.

அம்பாசமுத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் கோயில் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் மதுரை மற்றும் திருவனந்தபுரம் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

முற்காலத்தில் இப்பகுதியை வீரமார்த்தாண்டன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். சிவபக்தனான அம்மன்னன், சிவனுக்கு தனிக்கோயில் கட்ட வேண்டுமென விரும்பினான். ஆனால் அவனால் எந்த இடத்தில் கோயில் கட்டுவதென தெரியவில்லை. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய சிவன், இத்தலத்தைச் சுட்டிக்காட்டி தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பினான். சிவன் மன்னனின் பெயரால், “வீரமார்த்தாண்டேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.

நம்பிக்கைகள்:

திருமணத்தடை நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். கடன் பிரச்னை உள்ளவர்கள் இங்குள்ள பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

        தாமிரபரணி நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. சுவாமிக்கு இடப்புறத்தில் அம்பிகை தனிச்சன்னதியில் இருக்கிறாள். இங்கு சிவனும், அம்பிகையும் “சிவசக்திசொரூபமாக’ இருப்பதாக ஐதீகம். எனவே இருவரது சன்னதியையும் சேர்ந்து சுற்றி வரும்படியாக கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. புதிதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், தங்களது இல்வாழ்க்கை சிறப்பாக இருக்க சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

பிரச்னையால் பிரிந்திருக்கும் தம்பதியர், இங்கு வேண்டிக்கொள்ள அவர்களது வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று, திருக்கல்யாண விழா நடக்கிறது. கால பைரவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கடன் பிரச்னை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

திருவிழாக்கள்:

கார்த்திகையில் திருக்கல்யாணம், மார்கழி திருவாதிரை, நவராத்திரி.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அம்பாசமுத்திரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

அம்பாசமுத்திரம்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை மற்றும் திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top