Monday Nov 25, 2024

அட்டாலைச்சேனை ஆலங்குளம் சிவன் கோயில், இலங்கை

முகவரி

ஆலங்குளம் சிவன் கோயில், ஆலங்குளம், அட்டாலைச்சேனை, அம்பாறை மாவட்டம், இலங்கை

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

இலங்கையில், அம்பாறை மாவட்டத்தில் அட்டாலைச்சேனை எனும் இடத்தில் இருந்து உள்வீதி வழியாக 10 கி.மீ தூரத்தில் ஆலங்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ள இக்கோவில் ஓர் சைவ ஆலயமாகும். இவ்ஆலயம் எவராலும் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது. இவ் ஆலயம் சிவ வழிபாட்டிற்குரிய ஆலயமாக இங்கிருக்கும் ஆதாரங்களை வைத்து அறிய முடிகிறது. மிகவும் சிதிலமடைந்து காட்சியளிக்கும் இவ்வாலயம் ஒரு காலத்தில் மிகவும் செழிப்புடன் இருந்திருக்க வேண்டும். கோவிலை சுற்றி புதர் மண்டி கிடக்கிறது. மர செடிகள் கோவிலை முழுவதும் அக்கிரமித்துள்ளன. அதனால் மர வேர் சுவருக்குள் சென்று கட்டிடகலையை அழிவுக்குக் கொண்டுவந்துள்ளது. மிகவும் மோசமான நிலையில் உள்ள இக்கோவிலை யாரும் கவனிப்பதாக தெரியவில்லை. காலத்தின் மாற்றத்தினால் இக்கோவில் அழிவின் விளிம்பில் உள்ளது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆலங்குளம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பாடுள்ளா

அருகிலுள்ள விமான நிலையம்

கொழும்பு

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top