Monday Dec 23, 2024

வல்லம் வஜ்ஜிரேஸ்வரர் கோயில்,  தஞ்சாவூர்

முகவரி :

வல்லம் வஜ்ஜிரேஸ்வரர் கோயில், 

வல்லம்,

தஞ்சாவூர் மாவட்டம் – 613403.

இறைவன்:

வஜ்ஜிரேஸ்வரர்

இறைவி:

மங்களாம்பிகை

அறிமுகம்:

வல்லம் வஜ்ஜிரேஸ்வரர் கோயில் தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பகுதியில் உள்ள சிவன் கோயிலாகும். தஞ்சாவூர்திருச்சி நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து கிழக்கே உள்ள வல்லம் என்ற இடத்தில் உள்ளது. மாதவயோக நரசிம்மப்பெருமாள் கோயிலுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலிலுள்ள மூலவர் வஜ்ஜிரேஸ்வரர். இறைவி மங்களாம்பிகை.

வாயிலில் ராஜகோபுரம் காணப்படுகிறது. முன் மண்டபத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்பாக இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். வலப்புறம் விநாயகர் உள்ளார். இடப்புறம் முருகன் உள்ளார். விநாயகர் சன்னதிக்கு முன்பாக மூஞ்சுறும், பலிபீடமும் உள்ளன. முருகன் சன்னதிக்கு முன்பாக மயிலும், பலிபீடமும் உள்ளன. மூலவர் கருவறைக்கு முன்பாக ஒரு நந்தி உள்ளது. மூலவர் கருவறையின் வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மன் சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கோபுரத்தின் இடப்புறம், கோயிலின் உள்ளே நவக்கிரக சன்னதி காணப்படுகிறது. மூலவர் மற்றும் அம்மன் சன்னதிகள் விமானத்துடன் காணப்படுகின்றன. கோயிலின் வலது புறத்தில் அகழியை நினைவுபடுத்துகின்ற வகையில் குளம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. கோயிலின் வலது பக்கத்திலிருந்து இப்பகுதிக்குச் செல்வதற்கு படிகள் இருந்தததற்கான தடயங்கள் காணப்படுகின்றன.        

    

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வல்லம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top