வதியூர் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
வதியூர் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் சிவன்கோயில், வதியூர், காஞ்சிபுரம் மாவட்டம்- 631551
இறைவன்
இறைவன்: ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் இறைவி: ஸ்ரீ காமாக்ஷி
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த வதியூர் கிராமம். வெட்ட வெளியில் இருந்த சிவலிங்கத்தை எடுத்து சிறிய கோயிலாக கட்டி உள்ளார்கள் வதியூர் கிராம மக்கள். சுவாமி நாமம் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர். அம்பாள் ஸ்ரீ காமாக்ஷி. கிழக்கு பார்த்த சுவாமி சன்னதி. நந்தி தேவர், விநாயகர் முருகன் மற்றும் நவக்கிரக சன்னதிகள் இருக்கின்றன. ஆனாலும் கோவில் பழுதடைய ஆரம்பித்துள்ளது. மக்கள் யாரும் அவ்வளவாக வருவது இல்லை. சுற்றிலும் முட்களும், செடிகளும் முளைத்துக் காணப்படுகிறது. ஒரு கால பூஜை நடைபெறுகிறது. தொடபுக்கு திரு காந்தி -8883770026, திரு மணிகண்டன் 90478843. காஞ்சி- வதியூர், காஞ்சி-பனப்பாக்கம் பேருந்துகள் இங்கு வருகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மணப்பாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுராந்தகம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை