Monday Dec 23, 2024

பாகனேரி புல்வாநாயகி திருக்கோயில், சிவகங்கை

முகவரி :

அருள்மிகு புல்வாநாயகி திருக்கோயில்,

பாகனேரி,

சிவகங்கை மாவட்டம் – 630558.

இறைவி:

புல்வாநாயகி

அறிமுகம்:

புல்வநாயகி அம்மன் கோயில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டியில் இருந்து 6 கிமீ தொலைவில் பாகனேரியில் அமைந்துள்ளது. தல விருட்சம் என்பது நெய்கொத்த மரம். இக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானது.

புராண முக்கியத்துவம் :

       அசுரன் ஒருவன், தான் பெற்ற வரத்தின் பலனால் பூலோகத்தில் மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தான். அவனை அழித்து தங்களைக் காக்கும்படி மக்கள் சிவனை வழிபட்டனர். அவர் அம்பிகை மூலமாக அவனை அழிக்க ஒரு தந்திரம் செய்தார். அப்போது, அம்பிகை விளையாட்டாக சிவனின் கண்களை மூட, அவர் அம்பிகையை பூலோகில் பிறக்கச் செய்தார். இங்கு வந்தவள் அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து, மாயையாக போர் புரிந்தான். ஒருகட்டத்தில் அவன், புல் வடிவம் எடுத்தான். எனவே, அம்பிகை மானாக வடிவெடுத்து புல்லை மேய்ந்து, அவனை அழித்தாள். இவ்வேளையில் புதிய மானைக் கண்ட மக்கள் அதை நெருங்கினர். அம்பிகை ஓடிச்சென்று, ஓரிடத்தில் பூமிக்குள் புகுந்து கொண்டாள். மக்கள் அங்கு தோண்டிய போது, அம்பாளின் சிலை வடிவம் இருந்தது. மகிழ்ந்த மக்கள் அச்சிலையை இங்கு பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர். புல்வநாயகி என்றே பெயர் சூட்டினர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் உள்ள கோயில் இது.

நம்பிக்கைகள்:

பிறரால் அநீதி இழைக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனை பெற்றோர், பொருளைக் கொடுத்து ஏமாற்றப்பட்டோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு வழிபடுகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

ஒருநாள் தரிசனம்: அசுரனை அழித்தபோது உக்கிர வடிவம் எடுத்த அம்பிகைக்கு இங்கு பஞ்சலோக சிலை உள்ளது. சாமுண்டீஸ்வரி எனப்படும் இவளது உக்கிரத்தை மக்களால் தாங்க முடியாதென்பதால், இச்சிலையை மூலஸ்தானத்திற்குள்ளேயே வைத்துள்ளனர். இங்கு ஆனி மாதம் நடக்கும் திருவிழாவின்போது ஒருநாள் மட்டும் இவள் ஊருக்குள் வலம் வருவாள். அப்போது, அம்பிகையின் பார்வை மக்கள் மீது விழக்கூடாது என்பதற்காக, கண்களை பூமியைப் பார்த்தபடி அமைத்துவிடுவர். அன்று, புதிதாக திருமணம் செய்தோர், கர்ப்பிணிப் பெண்கள் யாரும் இந்த அம்பிகையைப் பார்க்க மாட்டர்.

விசேஷ தீர்தீத்தம்: அம்பிகையை வேண்டி பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், இங்கு நடக்கும் விழாவின்போது மஞ்சுவிரட்டு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது. கோயில் எதிரேயுள்ள தீர்த்தம் மிக விசேஷமானது. வஜ்ரகிரீடம் என்ற புழு, காலப்போக்கில் கல் போன்று கடினத்தன்மையுடையதாக மாறும் தன்மை கொண்டது. இதை சாளக்ராமம் என்பர். இவ்வகையான புழுக்கள் இக்கோயில் தீர்த்தத்தில் உள்ளது. எனவே, இந்த தீர்த்த்தில் நீராடி அம்பிகையை வழிபடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் தல விருட்சமான நெய் கொட்டா மரத்தின் கீழ், அக்னியம்பாள் பீட வடிவில் இருக்கிறாள். பக்தர்கள் இவளுக்கு மஞ்சள், குங்குமத்தால் அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கின்றனர்.

கோபுரத்தில் ஆன்மிகத்தை வளர்த்த விவேகானந்தர், சுதந்திரம் கிடைக்க பாடுபட்ட மகாத்மா காந்திஜி, காதலில் புதிய சரித்திரம் படைத்த ரோமியோ, ஜூலியட், சினிமாவில் காதலை வளர்த்த தியாகராஜ பாகவதர், ராஜகுமாரி சிலைகளும் உள்ளன. கோயிலுக்கு வெளியே கோபுரத்தின் கீழே கைந்தவக்கால கணபதி சன்னதி உள்ளது. கோபுரத்தின் கீழே, இக்கோயிலின் தேரில் இருந்த சிலைகளைப் பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரகாரத்தில் பைரவர், முனீஸ்வரர், சனீஸ்வரர் உள்ளனர்

கட்டிக்கொள்ளும் வழிபாடு: பிறரால் அநீதி இழைக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனை பெற்றோர், பொருளைக் கொடுத்து ஏமாற்றப்பட்டோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு வழிபடுகிறார்கள். இதற்காக கோயில் எதிரேயுள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு, கோயிலுக்குள் வருகின்றனர். அம்பாள் சன்னதி முன் நின்று கொண்டு, கொடிமரத்தை கட்டிக் கொண்டு தங்கள் குறையைச் சொல்லி வணங்குகின்றனர். அம்பிகை, தன்னை தஞ்சம் அடைந்தோருக்கு துணையாக உடன் இருந்து அருள்புரிவதாக நம்பிக்கை.

திருவிழாக்கள்:

நவராத்திரி, ஆடிவெள்ளி, தை வெள்ளி

காலம்

ஆண்டுகள் பழமையானது ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பாகனேரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மானாமதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top