Monday Dec 23, 2024

நல்லாவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

நல்லாவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், நல்லாவூர், பாலையூர் அஞ்சல், மயிலாடுதுறை (வழி), நாகப்பட்டினம் மாவட்டம் – 612205

இறைவன்

இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: செளந்தரநாயகி

அறிமுகம்

நல்லாவூர் பசுபதீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். தமிழ் நாடு கும்பகோணம் – கொல்லுமாங்குடிச் சாலையில் நல்லாவூர் பேருந்து நிறுத்தம் என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரியும் சாலையில் வந்து, பாலம் கடந்து, நல்லாவூர் ஊருக்குள் வந்து கோயிலை அடையலாம். நல்லாற்றூர் மக்கள் வழக்கில் தற்போது “நல்லாவூர்” என்று வழங்குகிறது. இக்கோயிலில் உள்ள இறைவன் பசுபதீஸ்வரர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார். பைரவர், சூரியன், சம்பந்தர், அப்பர், சுந்தரர், சீனிவாசப்பெருமாள், சுப்பிரமணியர், மகாலட்சுமி உள்ளனர். இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும். 1990-ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நல்லாவூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஆடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top