நல்லமலை சூர்யன் கோவில், தெலுங்கானா
முகவரி
நல்லமலை சூர்யன் கோவில், நல்லமலை, தெலுங்கானா
இறைவன்
இறைவன்: சூர்யன்
அறிமுகம்
இடிந்து விழும் தருவாயில் உள்ள நல்லமலையில் உள்ள சூர்ய கோவில், 1000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது, ஆத்மகூர் மண்டலத்தின் பெத்த அனந்தபுரத்தில் உள்ள சூரியன் சன்னதி 1080 இல் பதாமி சாளுக்கியர்களால் உருவாக்கப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தெலுங்கானா மாநிலத்தில் மஹ்பூநகர் மாவட்டத்தில் இந்த கோவில் உள்ளது. விமான கோபுரம் அதன் வடிவத்தை இழந்து முக்கோணம் மட்டுமே தற்போது தெரிகிறது. இதன் கருவறை 12 சதுர அடியில் பரவியுள்ளது. எட்டு அடி உயர கோபுரத்தைக் கொண்டுள்ளது. இக்கோயில் 100 பிராமண குடும்பங்கள் அடங்கிய அக்ரஹாரத்திற்கு சொந்தமானது என்று கருதப்படுகிறது. கோவில் வளாகத்தில் குளம் உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நல்லமலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
தர்லுபாடு
அருகிலுள்ள விமான நிலையம்
கர்னூல்