Saturday Jan 11, 2025

இளங்கார்குடி கைலாசநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கொரடாச்சேரி அஞ்சல், குடவாசல் தாலுகா, இளங்கார்குடி, திருவாரூர் மாவட்டம் – 613703. போன்: +91 89036 63144

இறைவன்

இறைவன்: கைலாசநாதர் இறைவி: பெரியநாயகி

அறிமுகம்

கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரிக்கு அருகிலுள்ள இளங்கார்குடி கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலவர் கைலாசநாதர் என்றும் தாயார் பெரியநாயகி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார். உற்சவர் சண்முகநாதர் தாயார் வள்ளி, தெய்வானையுடன், ஸ்தல விருட்சம் வில்வம், தீர்த்தம் சூரிய தீர்த்தம் (கிணறு). சோழ மன்னர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று.

புராண முக்கியத்துவம்

சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவத்தலங்களில் இதுவும் ஒன்று ஓதுவார் உள்ளிட்டவர்களை இங்கு குடியமர்த்தி சுற்றுப்பகுதி கோயில் அர்ச்சகர்களுக்கு 1890- ம் ஆண்டில் வேத பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதுடன், இத்தலத்தை மையப்படுத்தி நான்கு திசைகளிலும் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பஞ்ச பாண்டவர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். காலப்போக்கில் கோயில் பராமரிப்பில்லாமல் இடிந்து சேதமடைந்துள்ளது. முத்தையா குருக்கள் குடும்பத்தினர்கள் பராமரித்து செல்வந்தர்கள் மூலம் நிதி பெற்று கோயிலை கட்டி முடித்து இக்கோயிலுக்கு பல்வேறுப்பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

நம்பிக்கைகள்

கடன் தீரவும், சகல ஐஸ்வர்ங்கள் கிடைக்கவும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி பிரார்த்திக்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. அப்போது ஓதுவார் உள்ளிட்டவர்களை இங்கு குடியமர்த்தி சுற்றுப்பகுதி கோயில் அர்ச்சகர்களுக்கு 1890- ம் ஆண்டில் வேத பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதுடன், இத்தலத்தை மையப்படுத்தி நான்கு திசைகளிலும் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குப்பக்கம் முகப்பு வாயிலில் விநாயகர், முருகன் மூலவர் கிழக்குப் பக்கம் பார்த்தும், வெளிப்பிராகாரத்தில் தனி விமானத்துடன் நவக்கிரக மூர்த்திகளும், கால பைரவர் தெற்கு பக்கம் பார்த்தும், பெரியநாயகியம்மன் தெற்கு பக்கம் பார்த்தும் அருள்பாலிக்கின்றனர். மேலும் மகாம மண்டபத்தில் 200 பேர் அமர்ந்து தரிசனம் செய்யும் வகையில் இடம் உள்ளது. நான்கு கலசம் கோயிலில் இடம் பெற்றுள்ளது.

திருவிழாக்கள்

பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசிமகம், சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இளங்கார்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

கொரடாச்சேரி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top