இலுப்பநத்தம் அபயவரத குபேர லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், கோயம்புத்தூர்
![](http://lightuptemples.com/wp-content/uploads/temple/profile_image/eluppanatham-abhayavaratha-kubera-lakshmi-narasimhar-temple-coimbatore.jpg)
முகவரி
இலுப்பநத்தம் அபயவரத குபேர லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், இலுப்பநத்தம், கோயம்புத்தூர் மாவட்டம் – 641302.
இறைவன்
இறைவன்: அபயவரத குபேர லட்சுமி நரசிம்மர்
அறிமுகம்
இரணியனை அழித்த பின்னரும் அடங்காசினத்துடன் இருந்த சிங்கபிரானை மகாலட்சுமி சாந்தம் அடையச் செய்தாள் என்பதால் பெரும்பாலான தலங்களில் நரசிம்மர் லட்சுமி உடனே எழுந்தருளச் செய்வார்கள். இங்கும் அப்படியே அருள்பாலிக்கிறார் பெருமாள். கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் உள்ளது.
புராண முக்கியத்துவம்
தன் மீது கொண்ட பக்தி காரணமாக அடிக்கடி அகோபிலம் சென்று வணங்கிய பக்தர் ஒருவரின் கனவில் நரசிம்மர் தோன்றி அருளியதை அடுத்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இலுப்பநத்தம் கிராமத்தில் எழுதப்பட்டதுதான் அபயவரத குபேர லட்சுமி நரசிம்மர் கோவில். 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரங்கநாயகி சமதே ரங்கநாயகப்பெருமாள் திருக்கோயிலும் தேன்கல் கரடு என்ற குன்றில் உள்ள பெருமாள் கோயிலுக்கு மத்தியில் எளிய ஆலயத்தில் கோயில் கொண்டிருக்கும் லட்சுமி நரசிம்மர் குபேர திசையான வடக்கு நோக்கி சேவை சாதிப்பதால் குபேர லட்சுமி நரசிம்மர் என்ற திருநாமம் இவருக்கு அமைந்துள்ளது. நரசிம்மருக்கு அருகில் ஆஞ்சநேயர் இருப்பார்கள் அது போலவே சில கிலோமீட்டர் தூரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடுகம்பாளையம் அனுமந்தராய சுவாமி திருக்கோயிலும் உள்ளது.
நம்பிக்கைகள்
மாதந்தோறும் சுவாதி நட்சத்திர நாளில் நடைபெறும் சுதர்சன ஹோமம் வழிபாட்டில் கலந்து கொண்டால் எதிரிகள் தொல்லை நீங்கும், வர்த்தகத்தில் வளர்ச்சி உண்டாகும், கடன்கள் விரைவில் அடைபடும், மனதில் நேர்மறையான எண்ணங்கள், தீய சக்திகள் விளங்கும், தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும், வேலைவாய்ப்பு கிட்டும் என்பது நம்பிக்கை. அதோடு அன்றைய தினம் 16 வகை மூலிகையும் அங்கு உள்பட ஐவகை ஹோமமும் தொடர்ந்து பால் இளநீர் திரவியப் பொடிகளால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. மத்திய பூஜைகள் தொடர்ந்து கலந்து கொண்டால் நீண்டகால நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. திருமண வரம் குழந்தை வரம் வேண்டுவோர் இந்த பூஜையில் கலந்து கொள்கிறார்கள். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விசேஷ ஏற்பாடுகள் உண்டு.
சிறப்பு அம்சங்கள்
இல்லறம் நல்லறமாய் நடப்பதில் கணவனுக்கும் மனைவிக்கும் சம பங்கு உண்டு என்பதை உணர்த்துவது போல் அமைந்ததே லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். அதோடு லட்சுமியும் நரசிம்மரும் இந்த வடிவில் மகிழ்வோடு இருப்பதால் இதனை வணங்குவோருக்கு கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தம்பதி சமேதராக இருந்து அருள் புரிவதால் குடும்பத்தில் ஒற்றுமை, தம்பதிக்கு இடையே அன்யோன்யம் என்று எல்லா நன்மைகளும் இத்தல லட்சுமி நரசிம்மரை வணங்கும்போது கிடைக்கும் என்கிறார்கள்.
திருவிழாக்கள்
தினசரி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோ பூஜை மற்றும் அஸ்வ பூஜை, லட்சுமி குபேர யாகம் நடக்கிறது அதைத்தொடர்ந்து எட்டரை மணிக்கு ஏகாந்த சேவை நடைபெறுகிறது. கோவிலில் சிறப்பு வழிபாடுகள் ஆராதனைகள் நடக்கும் சமயங்களில் எல்லாம் இத்தலத்துக்கு நேர் மேலாக கருடன் வட்டமிடும். அதை விசேஷமாக சொல்கிறார்கள்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இலுப்பநத்தம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோயம்பத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்