Friday Dec 27, 2024

ஆக்கினாம்பட்டு சங்கராகர ஈஸ்வர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

ஆக்கினாம்பட்டு சங்கராகர ஈஸ்வர் சிவன்கோயில், ஆக்கினாம்பட்டு, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312..

இறைவன்

இறைவன்: ஸ்ரீ சங்கராகர ஈஸ்வர் இறைவி: ஸ்ரீ வாலை பரமேஸ்வரி

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த ஆக்கினாம்பட்டு கிராமம். வெட்ட வெளியில் உள்ள இந்த ஆலயத்தின் சுவாமியின் திருநாமம் ஸ்ரீ சங்கராகர ஈஸ்வர். அம்பாள் ஸ்ரீ வாலை பரமேஸ்வரி. சுவாமி எதிரில் நந்தி தேவர். வேறு எந்த இறை வடிவங்களும் காணப்படவில்லை. சுவாமியை ஒரு மேடைப்போல் அமைத்து அதன் மேல் இறைவனையும் நந்தியையும் அமர்த்தியுள்ளனர். இறைவன் மரத்தின் நிழலில் உள்ளார். அருகிலேயே திருக்குளமும் இருக்கிறது. திரு ஆறுமுகம் என்பவர் பூஜை செய்கிறார். தொடர்புக்கு திரு பசுபதி-7639485078,திரு ஆறுமுகம் 97874 75779, திரு சங்கர்-9176781059 செய்யூர், கூவத்தூரிலிருந்து இங்கு வரலாம்.,

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆக்கினாம்பட்டு

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top