Monday Jan 13, 2025

அரிமளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை

முகவரி :

அரிமளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,

அரிமளம், புதுக்கோட்டை மாவட்டம்

தமிழ்நாடு – 622201.

தொலைபேசி: +91 96294 57337

இறைவன்:

சுந்தரேஸ்வரர்

இறைவி:

மீனாட்சி

அறிமுகம்:

 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிமளத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் என்றும், அம்மன் மீனாட்சி என்றும் அழைக்கப்படுகிறார். மார்ச் 19 முதல் 21 வரை சூரியனின் கதிர்கள் பிரதான தெய்வத்தின் மீது விழுந்தன.

புராண முக்கியத்துவம் :

 விசுவாவஸூ என்ற கந்தர்வனின் மகள் வித்யாவதி. இவர் அம்பாளின் தீவிர பக்தை. இவள் மீனாட்சியின் அம்சமும், கல்வியின் நாயகியுமான சியாமளாதேவியை தன் மகளாகக் கருதி வழிபட்டு வந்தாள். அவளது பக்தியை மெச்சி காட்சியளித்தாள் சியாமளா. வித்யாவதி அவளிடம், அம்மா! உன்னை மகளாகக் கருதி வழிபட்டேன். உண்மையிலேயே நீ எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும், என்று வேண்டினாள். அவளது வேண்டுதல் அடுத்த பிறப்பில் நிறைவேறும் என அம்பாள் வாக்களித்தாள். அதன்படி வித்யாவதி, சூரசேனன் என்ற மன்னனுக்கு மகளாகப் பிறந்து, மதுரையை ஆண்ட மலையத்துவஜ பாண்டியனை மணந்து கொண்டாள்.

குழந்தைப்பேறு இல்லாத மன்னன், ஒரு யாகம் நடத்தினான். அதில் அம்பிகை மூன்று வயது சிறுமியாகத் தோன்றினாள். கலைகளை கற்றுத்தேர்ந்த அவளிடம், மதுரையை ஆளும் பொறுப்பைக் மன்னர் கொடுத்தார். மீன், தன் குஞ்சுகளுக்கு கண்களாலேயே உணவு கொடுப்பது போல், தன்னை வேண்டும் பக்தர்களுக்கு கருணைக் கண் பார்வையாலேயே அருள் செய்ததால் இவள் மீனாட்சி என்று பெயர் பெற்றாள். நல்லாட்சி நடத்திய மீனாட்சி, திக்விஜயம் சென்றபோது கயிலாயத்தில் சிவனைக் கண்டாள். அவளை மணக்க, சிவன் மதுரைக்கு வந்தார். திருமணத்திற்கு பின்பு, மதுரையை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மதுரை மீனாட்சி தங்கள் பகுதியிலும் அருளாட்சி புரிய வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன் பக்தர்களால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சிறிய அளவில் கட்டப்பட்டது. 66 ஆண்டுகளுக்கு முன் இதை ஓரளவு பெரிய அளவில் கட்டினர்.

நம்பிக்கைகள்:

கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம் இது.

சிறப்பு அம்சங்கள்:

சுந்தரேஸ்வரர் சன்னதி எதிரில், தீர்த்தம் அமைந்துள்ளது. சித்திரைத் திருவிழாவில் 11ம் திருநாளில் இதில் தெப்பத் திருவிழா நடக்கிறது. கிரகரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம் இது. ஆனால், அவ்வாறு தத்து கொடுக்கும் நபருக்கு வேறு கோயிலில் வேண்டுதல் எதுவும் பாக்கி இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அந்த நேர்ச்சைகளை நிறைவேற்றிவிட்டு இங்கு வந்து தத்து கொடுக்க வேண்டும். இவ்வகையில், இந்த சுந்தரேஸ்வரர், இறைவனுக்கு கூட கடனைத் தீர்த்தவராகக் கருதப்படுகிறார். சுத்த சாசன கிரயமாக என்னுடைய குழந்தையை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு தத்து கொடுக்கிறேன், இனி இது என்னுடைய குழந்தையில்லை. மீனாட்சி சுந்தரேஸ்வரரின் குழந்தை, என்று கூறி, கண்ணீர்ணீ மல்க பெற்றோர் தங்கள் குழந்தையை அர்ச்சகரிடம் ஒப்படைக்கின்றனர். அர்ச்சகர் அந்தக் குழந்தையை தாய்மாமா அல்லது தாத்தா, பாட்டியிடம் ஒப்படைக்கிறார். குழந்தையின் திருமணத்தின் போது பெற்றோர் கோயிலுக்கு மீண்டும் சென்று சுவாமியிடம், என்னுடைய குழந்தையை சுவாமிக்கு தத்து கொடுத்ததாக கூறிய என்னுடைய வாக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி, குழந்தையின் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்து செல்கின்றனர்.

ஊர் பெயர்க்காரணம்: அரி என்றால் சந்திரன், மழ என்றால் குழந்தை. முழு நிலவாக இருந்த சந்திரன் தனக்கேற்பட்ட சாபத்தால், குழந்தை போல் சிறுவடிவாகி குறுகி கொண்டே வந்தார். அனைத்து கலைகளையும் இழந்தார். வில்வமரம் அடர்ந்த பகுதியான அரிமளம் வந்தார். அவரைக் காப்பாற்றும் வகையில், இறைவன் அவரைத் தன் தலைமீது சூடிக் கொண்டார். சாபமும் நீங்கியது. சுந்தரேசப் பெருமானின் திருவருளால், அவருடைய சடைமுடியில் இளம்பிறையாகி (அரிமளமாகி) சந்திரன் அமர்ந்தார். அண்ணலே! தங்கள் திருவருளால் அடியேன் இழந்த கலைகளை இங்கு பெற்றேன், இதனால் இவ்வூர் அரிமளம் என்ற பெயரால் அழைக்க அருள்புரிய வேண்டும், என்று வேண்டிக் கொண்டான். சிவபெருமானும் அவ்வாறே அருள்புரிந்ததால் அரிமளம் என்ற பெயர் ஏற்பட்டது. அரும்பள்ளம் என்ற சொல்லே மருவி அரிமளம் என்று ஆயிருக்கலாம் என்றும், இங்குள்ள விளங்கியம்மன் சன்னதியில் ஏரழிஞ்சிப்பழம் என்ற அரிய வகை காணப்பட்டதால் அரும்பழம் என்று பெயர் ஏற்பட்டு அரிமளம் என்று சுருங்கியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

திருவிழாக்கள்:

சித்திரையில் நடைபெறும் தெப்பத் திருவிழா.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அரிமளம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

புதுக்கோட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top