Friday Dec 27, 2024

​மகா சிவராத்திரி: இரவு முழுவதும் கண் விழிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா…?

சக்திக்கு ஒன்பது ராத்திரி. அது நவராத்திரி. சிவனுக்கு ஒரு ராத்திரி. அது சிவராத்திரி. சைவமக்கள் கடைப்பிடிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது சிவராத்திரியாகும். மகாசிவராத்திரி தினத்தில் சிவ ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றால் புண்ணியம்  கிடைக்கும் என்கின்றன புராணங்கள். சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு மயங்கிக் சாய்ந்தார். அப்போது சிவபெருமானை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்திரி. பிரளய காலத்தில் உலகம் முற்றிலுமாக அழியாமல் இருக்க இந்த அகிலத்தின் அன்னையான அகிலாண்டேஸ்வரி, ஈசனை சிவராத்திரி அன்று நான்கு  ஜாமத்திலும் பூஜை […]

Share....

செங்காலி மாலை பலன்கள்

ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள் தெய்வங்களை வழிபடும்போது சில மாலைகளை கழுத்தில் அணிந்து கொண்டு வழிபடுவார்கள். அதிலும் குறிப்பாக சிவபெருமானுக்கு உரிய மாலையாக ருத்ராட்ச மாலையும் சபரிமலைக்கு ஐயப்பனுக்கு உரிய மாலையாக துளசி மாலையும் முருகனுக்கு உகந்த மாலை ஆக சந்தனமாலையும் திகழ்கிறது என்று கூறலாம். இந்த மாலைகளோடு மட்டுமல்லாமல் இன்னும் பிற மாலைகளை அணிந்து கொள்வதால் பல நன்மைகள் நம் வாழ்வில் ஏற்படும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் செங்காலி மாலையை அணிவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றி தான் பார்க்கப் […]

Share....

லிங்கத்திருமேனி மீது சூரிய ஒளி ஆரியபட்டி கோவிலில் அதிசயம்

திருப்பூர் : காங்கயம் அருகே ஆரியபட்டியில் உள்ள பழம்பெருமையும், பல்வேறு சிறப்புகளும் வாய்ந்த மாதேஸ்வரன் கோவிலில் சூரிய ஒளி மூலவர் மீது விழும் அதிசயம் காணப்படுகிறது. காங்கயம் அருகே ஆரியபட்டியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாதேஸ்வரன் கோவில் உள்ளது. மாதவன் என்கிற விஷ்ணு பூஜித்த சிவன் என்பதால் இவரை மாதேஸ்வரன் என்றும் மாதேசிலிங்கம் என்றும் அழைக்கின்றனர். இங்குள்ள விஷ்ணு தீர்த்தம் கிணறு தோற்றத்தில் இருந்தாலும் அது பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ளது. மூலவரான சிவலிங்கம் சிவாச்சாரியர்களால் காசியிலிருந்து பானலிங்கமாக, […]

Share....

அவசியம் தரிசிக்க வேண்டிய அபூர்வமான 15 பெருமாள் கோவில்கள்

காக்கும் கடவுளான திருமாலுக்கு உலகம் முழுவதும் ஏராளமான கோவில்கள் உள்ளன. 108 திவ்ய தேசங்கள் தவிர, இன்னும் பல கோவில்கள் உள்ளன. இவற்றில் பல கோவில்களில் பெருமாள், வேறு எங்குமே காண முடியாத அரிய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இது போன்ற அரிதான கோலங்களில் பெருமாளை தரிசனம் செய்வதும் மிகவும் புண்ணியமானதாகும். வாய்ப்பு இருப்பவர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த தலங்களுக்கு சென்று தரிசிப்பதன் மூலம் பெருமாளின் திருவருளை பெற முடியும். ? அரிதான பெருமாள் திருக்கோலங்கள் கொண்ட […]

Share....

கருவறையின் மேற்கூரையில் அற்புத சிற்பம்

கந்தபெருண்டா அல்லது பேருண்டா என்பது, ஹிந்து புராணங்களில் இரண்டு தலை பறவையாகும். இது ஹிந்து கடவுள் விஷ்ணுவால் அனுமானிக்கப்படும் ஒரு வடிவம். இந்த வடிவ சிற்பக்கலை, தமிழகத்தின் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ளது. கர்நாடகாவில் ஒரு கோவிலிலும் கருவறையின் மேற்கூரையின், கந்தபெருண்டா சிற்பக்கலை உள்ளது. ஷிவமொகாவில் இருந்து சாகருக்கு செல்லும் வழியில், கவுதி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கவுதி ஆட்சியாளர் என்று அழைக்கப்படும் சவுடப்ப நாயக்கரால் கட்டப்பட்ட, ராமேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. ஹொய்சாளா – […]

Share....

திருவண்ணாமலை கோவில் எதிரே வணிக வளாகம் கட்டுவதா?: பக்தர்கள் கோபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தை வழிபட முடியாத வகையில், வணிக வளாகம் கட்டும் பணிக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பக்தர்களுக்கு ஆதரவாக, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கோவில் நிர்வாகத்தை கண்டித்து போராடி வருகின்றன. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்துக்கு எதிரே இருக்கும், 11 கால் மண்படத்தை ஒட்டிய பகுதியில், இரண்டு அடுக்குகளில் புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. கோவிலில் நுழைவாயிலாக அமைந்துள்ள ராஜகோபுரம், 11 நிலைகளுடன், […]

Share....

வல்லநாடு திருமூலநாதர்

தாமிரபரணி கரையில் உள்ள வல்லநாடு பகுதியை, 16-ம் நூற்றாண்டில் சீமாறன் வல்லப பாண்டியன் ஆண்டு வந்தான். அதனால் அந்த பகுதியை, ‘சீமாறன் சீவல்லப வள நாடு’ என்று, அவன் பெயரிலேயே அழைத்தனர். ஒரு முறை வழக்கம் போல, நாட்டை சுற்றி வந்து கொண்டிருந்தான் மன்னன். ராஜன் குளத்தை சுற்றி வந்தபோது, கரு மேகங்கள் சூழ்ந்து, மழைக்கான அறிகுறியை பறைசாற்றின. மறுகணமே, வானில் மின்னல் பளிச்சிட்டு, இடியுடன் கூடிய மழை கொட்டியது. தானும், தான் வந்த குதிரை மற்றும் […]

Share....
Back to Top