Wednesday Jan 01, 2025

3000-ம் ஆண்டு பழமையான கோவிலின் நிலத்தடி பாதையை கண்டு பிரமித்த தொல்பொருள் ஆய்வாளர்கள்

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜான் ரிக் இந்த கோவிலின் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

தொழில்நுட்ப ரீதியாக நம் உலகம் பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வரும் நிலையில், பல 100 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இன்று நாம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மேம்பட்ட தொழில்நுட்பம், கட்டமைப்பு என்று பல விதங்களில் நம்மை விட அதிக அட்வான்ஸ்டாக வாழ்ந்துள்ளனர்.

இதற்கு சான்றாக தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்களின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் அதிசயத்தக்க வகையில் இருக்கின்றன. அதில் ஒன்று தான் சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த பாதைகள்! பெருவியா நாட்டில் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான ஒரு கோவிலின் அடிவாரத்தில் பல பாதைகள் கண்டறியப்பட்டுள்ளன.

பெருவியனில் உள்ள ஆண்டிஸில் 3,000 ஆயிரங்கள் ஆண்டு பழமையானது Chavin de Huantar என்ற இந்த கோவில். இது ஆண்டிஸ்ஸின் வட-மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில், இந்த கோவில் மக்களின் வழிபாட்டு தளமாகவும், நிர்வாக மையமாகவும் இருந்தது. கடல் மட்டத்தில் இருந்து 3200 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த கோவில், பல ஆண்டுகளாக ஆய்வுக்குட்பட்டு வந்துள்ளது.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜான் ரிக் இந்த கோவிலின் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரின் ஆய்வின் படி, இதில் இருந்த பாதைகள் கடந்த மே மாதம் கண்டறியப்பட்டன. குறைந்தப்பட்சமாக, 35 நிலத்தடி பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இதற்கு மேலும் கூடுதலாக பல பாதைகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பெரும்பாலான பழமையான ஆலயங்களில் நிலத்தடி பாதைகள் இருக்குமே, இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று யோசிக்கலாம். இந்தக் கோவிலில் உள்ள நிலத்தடி பாதைகள் அனைத்துமே ஒன்றோடொன்று இணைந்துள்ளன. இந்த நிலத்தடி பாதைகளின் கட்டமைப்பு ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்துள்ளதாகவும், இது மேம்பட்ட கட்டடக்கலை மற்றும் நுட்பமான வேலைத்திறன் ஆகியவற்றுக்கு உதாரணமாக இருக்கிறது.

மேலும், இந்தப் பாதைகள் ஒரு வலையமைப்பைப் போல் கட்டப்பட்டுள்ளன. இவை, கிமு 1200ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top