Tuesday Dec 24, 2024

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவிலில் மராமத்து பணி..

சென்னை: ‘கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்என, அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது சுற்றறிக்கை:அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சில கோவில்களில், 12 ஆண்டுகள் முடிந்தும் திருப்பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளன. கும்பாபிஷேகம் நடந்து சில ஆண்டுகள் ஆன பல கோவில்களும் பொலிவிழந்து காணப்படுகின்றன.



அதுபோன்று உள்ள கோவில்களில், திருவிழாக்களின்போது விமானம், கோபுரம் நீங்கலாக, பாலாலயம் செய்யாமல் கோவில் முன் மண்டபம், அர்த்த, மகா மண்டபம், மடப்பள்ளி, மதில்சுவர் உள்ளிட்டவற்றை, குறிப்பிட்ட கால இடைவெளியில் பழுதுபார்த்து புதுப்பிக்க வேண்டும் .இரும்புக் கதவுகளுக்கு வர்ணம் தீட்டுதல், சிதைவுற்ற பகுதிகளை சரிசெய்தல், மரக் கதவுகளை பழமை மாறாமல் புதுப்பித்தல் போன்ற பணிகளை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.இப்பணிகளை குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அல்லது கோவில் பொலிவிழந்து காணப்பட்டாலோ, கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் முடிவடைய வேண்டும் என காத்திருக்காமல், உடனே மேற்கொள்ள வேண்டும். இதற்கான கால இடைவெளி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என வரையறுக்கப்படுகிறது.இவ்வாறு குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top