Sunday Jan 12, 2025

ஹம்பி மூல விருபாக்ஷா கோயில், கர்நாடகா

முகவரி

ஹம்பி கோயில், ஹோசாபெட், விஜயநகர மாவட்டம், கர்நாடகா, இந்தியா

இறைவன்

இறைவன் : சிவன்

அறிமுகம்

Hampi, ஹம்பி) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் மற்றும் உலகப் பாரம்பரியக் களம் ஆகும். விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய போது இதன் பெயர் விஜயநகரம் ஆகும். ஹம்பி, விசயநகரப் பேரரசின் தலைநகரமான விசயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது. விசயநகரத்துக்கும் முந்திய காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கக்கூடிய இவ்வூர் இன்றும் ஒரு முக்கியமான சமயச் சிறப்புவாய்ந்த இடமாகத் தொடர்ந்து வருகிறது. புகழ்பெற்ற விருபாட்சர் கோயில் இவ்விடத்தில் உள்ளது. ஹம்பி, விசயநகரத்தோடு தொடர்புடைய மேலும் பல நினைவுச் சின்னங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வூர் பழைய நகரத்தின் வீதிகளிலும் விரிவடைந்து உள்ளது. 2014 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி அதிகப்படியாக கூகுளில் தேடப்பட்ட கர்நாடக வரலாற்றுச் சிறப்புடைய இடங்களுள் முதலாவதாக ஹம்பி உள்ளது. விசயநகரப் பேரரசின் படையில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வீரர்கள் இருந்துள்ளனர். கிபி 1500 இல் விசயநகரப் பேரரசில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 500,000 ஆக இருந்ததாகச் சொல்லப்படுகிறது (இது 1440-1540 காலத்திய உலக மக்கட்தொகையில் 0.1% ஆகும்). இதனால் அன்றைய காலத்தில் இந்நகரம் மக்கட்தொகையளவில் பீஜிங்குக்கு அடுத்தபடியானதும் பாரிசைப் போல மூன்று மடங்கானதானதும் ஆகும். விசயநகரத்தின் நினைவுச் சின்னங்கள், ஹம்பி நினைவுச் சின்னங்களின் தொகுதி என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

புராண முக்கியத்துவம்

பெல்லாரி மாவட்டத்தில் கிடைத்த பேரரசர் அசோகரின் சாசனங்களின் படி கிமு மூன்றாம் நூற்றாண்டில் இப்பகுதி மௌரியப் பேரரசின் பகுதியாக இருந்ததாக அறியப்படுகிறது. இப்பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் பிராமி கல்வெட்டும், இரண்டாம் நூற்றாண்டைச் (பொ-ஊ) சேர்ந்த சுடுமண் முத்திரையும் கிடைத்துள்ளது. ஹம்பியின் குடியேற்றங்கள் கி.பி முதலாம் ஆண்டிலிருந்து தொடங்கியதாகச் சொல்லப்படுகின்றது. விசயநகரப் பேரரசின் எழுச்சிக்கு சிறிதுகாலம் முன்னர் ஹம்பியிலிருந்து கிழக்கே 19 கிமீ தொலைவிலுள்ள சிறு நகரமான கம்ப்பிளியை ஆண்டவர்களின் கைவசம் ஹம்பி இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தும் உள்ளது. விசயநகரப் பேரரசு தக்காண முகலாய சுல்தான்களின் படையெடுப்புக்குள்ளானபோது அப் பேரரசின் தலநகரத்தின் மிகச்சிறந்த பகுதியாக ஹம்பி விளங்கியது. வற்றாத துங்கபத்திரை ஆற்றால் ஒரு புறமும், ஏனைய மூன்றுபுறங்களிலும் இயற்கை அரணாக அமைந்த மலைகளாலும் சூழப்பட்ட இதன் அமைவே தலைநகராக அமைந்ததற்கு முக்கியக் காரணமாகும். 1420-ஆம் ஆண்டு இந்நகரைப் பார்க்க வந்த நிக்கோலா கோண்டி என்ற இத்தாலியப் பயணி இந்நகரம் 60 மைல் சுற்றளவு கொண்டது என்று கூறியுள்ளார். ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்காட்லாந்திய இராணுவ அதிகாரியும் இந்தியாவின் முதல் தலைமை மதிப்பீட்டாளருமான கர்னல் காலின் மெக்கன்சீயால் 1800 ஆம் ஆண்டு ஹம்பியின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. விசயநகரப் பேரரசின் காலத்தில் இங்கு பல கோயில்கள் இருந்தன. இங்குள்ள பம்பபதி கோயில் (விருபாட்சர் கோயில்), அசரா இராமர் கோயில், உக்கிர நரசிம்ம சுவாமி கோயில், விட்டலர் கோயில் ஆகியவற்றின் அழிபாடுகள் விசயநகரப் பேரரசின் எச்சங்களாகக் காணப்படுகின்றன. இந்தியத் தொல்லியல் துறையினர் தொடர்ந்து இவ்விடத்தில் அகழ்வாய்வு நடத்திவருகிறது. மால்யவந்தா மலையின் வடக்கு சரிவுக்கும் தலரிகட்டா வாயிலுக்கும் இடையே இசுலாமிய குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. அரசவையின் உயர் அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் வசித்த இடமாக இசுலாமியக் குடியிருப்புப்பகுதி இருக்கக்கூடுமென தொல்லியலாய்வாளர்கள் கருதுகின்றனர். இராமாயணத்தில் வரும், குரங்கு அரசான கிஷ்கிந்தையுடன் ஹம்பியில் உள்ள பல புண்ணிய இடங்கள் அடையாளம் காணப்படுவது உண்டு. அம்பிக்கு அருகில் உள்ள நிம்பபுரம் என்ற ஊரில் வாலியின் எச்சங்கள் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

இறைவன் மீது உள்ள ஆத்மார்த்தமான பக்தியைக் ஏற்பட்ட காண இந்த படத்தை ஏற்கனவே பார்த்திருப்போம் யார் இவர் எங்கே இருக்கிறார் என்று எண்ணுபவர்களுக்கு கவனத்திற்கு இவர் பெயர் கே என் கிருஷ்ணர் ஐயங்கார் 88 வயது முதியவர் கர்நாடகாவில் அம்பி என்ற இடத்தில் உள்ள படவி லிங்கம் கோயில் கயவர்களின் கோபுர தாண்டவத்தால் கோவில் கோபுரத்தை உடைத்து முடிந்தது அதனால் கம்பீரமாக நிற்கும் 9 அடி உயர்ந்த லிங்கத்தை நெருங்க முடியவில்லை 450 ஆண்டுகளாக பூஜைகள் இல்லாமல் விடுபட்டு இருக்கும் லிங்கத்திற்கு 1980 1980 ஆம் ஆண்டு முதல் இவர் தனிமனிதனாக பூஜை செய்து உள்ளார் இனி இவர் கோவிலை பராமரிப்பாளர் என்று கூறியுள்ளார் வருடங்களுக்கு இருமுறை மட்டுமே ஊதியம் பெற்றுக் கொண்டு இந்த உன்னதமான புனித சேவைகளை செய்துள்ளார் இது போன்ற உன்னதமான உன்னதமான பக்தர்களின் அற்பணிப்பு பணியால் தான் உண்மையான நல்ல பக்தர்களுக்கு நல்ல ஆர் பணிவு போன்றதுஇது போன்றவர்களின் குடும்பத்தைகுடும்பம் மிகச்சிறந்த சிறப்பு அடைய அடைய ஒவ்வொரு பக்தர்களும் ஆத்மார்த்தமாக அவசியம் வேண்டிக் கொள்ள வேண்டும்

காலம்

1000 – 2000

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அய்ஹோல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஹோசாபேட்

அருகிலுள்ள விமான நிலையம்

ஜிண்டால்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top