Friday Dec 27, 2024

வொண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி

வொண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவில், ஆந்திரப்பிரதேசம்

இறைவன்

இறைவன்: கோதண்டராம ஸ்வாமி

அறிமுகம்

கோதண்டராமன் கோயில் என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தின் ராஜம்பேட்டை வட்டத்திலுள்ள வொண்டிமிட்டா என்னுமிடத்தில் அமைந்துள்ள இக்கோவில் இராமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். விஜயநகரக் கட்டிடக்கலை பாணியின் உதாரணமான இந்த கோயில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இப்பகுதியிலுள்ள மிகப்பெரிய கோயிலான இது கடப்பாவிலிருந்து 25 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது ராஜம்பேட்டைக்கு அருகில் உள்ளது. கோயிலும் அதன் அருகிலுள்ள கட்டிடங்களும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். கோயிலின் நிர்வாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஆந்திர அரசு ஒப்படைத்துள்ளது.

புராண முக்கியத்துவம்

உள்ளூர் புராணத்தின் படி, இந்த கோயில் நிஷாத (போயா) வம்சத்தைச் சேர்ந்த வொண்டுடு – மிட்டுடு என்ற இருவரால் கட்டப்பட்டது. கொள்ளையர்களாக இருந்த இவர்கள் பின்னர், இராமனின் பகதர்களாக மாறி இக்கோயிலை கட்டியதாக ஒரு கதை கூறப்படுகிறது. இந்தக் கோயில் 16 ஆம் நூற்றாண்டில் சோழர்களாலும், விஜயநகர மன்னர்களின் காலத்திலும் கட்டப்பட்டது. வொண்டிமிட்டாவில் வாழ்ந்த பம்மேரா பொட்டானா என்பவர் தெலுங்கு மொழியில் “மகா பாகவதம்” என்ற மகத்தான படைப்பை எழுதி இராமனுக்கு அர்ப்பணித்தார். வால்மீகியின் இராமாயணத்தை (இராமனின் கதையை விவரிக்கும் இந்துக் காவியம்) தெலுங்கில் மொழிபெயர்த்தற்காக ‘ஆந்திர வால்மீகி’ என்று அழைக்கப்படும் வாவிலகோலனு சுப்பா ராவும் இங்கு ராமரை வணங்குவதற்காக தனது காலத்தை செலவிட்டார். அன்னமாச்சாரியார் இக்கோயிலுக்கு வந்து இராமனைப் புகழ்ந்து பாடல்களையோ அல்லது கீர்த்தனைகளையோ இயற்றி பாடியதாகக் கூறப்படுகிறது. 1652ஆம் ஆண்டில் இந்த கோயிலுக்கு வருகை தந்த பிரெஞ்சு பயணி யீன்-பாப்டிஸ்ட் டேவர்னியர், கோவிலின் கட்டிடக்கலையின் நேர்த்தியைப் பாராட்டினார். பாவனாசி மாலா ஓபன்னா என்ற இராமனின் பக்தர் கோவிலுக்கு முன்னால் இராமனைப் புகழ்ந்து பாடல் அல்லது கீர்த்தனைகளை பாடியுள்ளார். கிழக்கு கோபுரத்தின் முன் மண்டபத்திலுள்ள ஒரு தூணில் இவரது உருவம் செதுக்கபட்டுள்ளது. இராம தீர்த்தம், இலட்சுமண தீர்த்தம் என்ற இரண்டு குளங்களும் கோயிலின் வளாகத்தில் அமைந்துள்ளன.

திருவிழாக்கள்

இராமனின் பிறந்த நாளான இராம நவமி இங்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

காலம்

16 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வொண்டிமிட்டா

அருகிலுள்ள இரயில் நிலையம்

வொண்டிமிட்டா

அருகிலுள்ள விமான நிலையம்

கடப்பா

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top