Sunday Dec 22, 2024

வடபாதிமங்கலம் அருணாசலேஸ்வரர்  சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :

வடபாதிமங்கலம் அருணாசலேஸ்வரர்  சிவன்கோயில்,

வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர் வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 610206.

இறைவன்:

அருணாசலேஸ்வரர் 

இறைவி:

உண்ணாமுலை அம்மன்

அறிமுகம்:

  கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் ஏழு கிமீ தூரத்திலும், திருவாரூர்- திருத்துறைபூண்டி சாலையில் உள்ள மாவூரில் இருந்து பத்து கிமீ தூரத்தில் உள்ளது. இத்தலத்தின் இறைவனை இடைக்காட்டு சித்தர் வழிபட்டதாக வரலாறு சொல்கிறது. வடபாதிமங்கலம்‌ முன்னியூர்‌ அகத்தீசுவரமுடையார்‌ கோயிலில்‌ உள்ள சோழர்‌ கால கல்வெட்டொன்றில்‌ “*வடவாரிமங்கல முடையான்‌” என்ற பெயர்‌ காணப்படுகிறது. இதனால் இவ்வூர்‌ சோழ மன்னராட்சி காலத்திலிருந்தே இருந்து வருகிறதெனலாம்‌ திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு எப்படி ஒரு சிறப்பு உண்டோ, அதேபோல் வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவில் தேரும் சிறப்பு வாய்ந்ததாகும். திருவாரூர் ஆழித்தேரோட்டம் நடைபெற்று முடிந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவில் தேர், பக்தர்களால் வடம்பிடித்து தேரோட்டம் நடைபெறும். இந்த தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து 20 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கிழக்கு நோக்கிய திருக்கோயில், முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. அதனை தாண்டியவுடன் இரண்டாம் பிரகாரம் அதில் இறைவனின் நேர் எதிரில் செப்பு கொடிமரம் உள்ளது. அதனை கடந்து உயர்ந்த மதில் சுவர் கொண்ட முதல் பிரகாரம் அடையலாம். இறைவன் – அருணாசலேஸ்வரர் இறைவி – உண்ணாமுலை அம்மன் இறைவன் கிழக்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார், அர்த்தமண்டபம் முகப்பு மண்டபம் என உள்ளது, இறைவி தெற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார். பிரகாரத்தில் விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி என உள்ளது. விநாயகர் அருகில் இடைக்காட்டு சித்தர் சிலை உள்ளது. வடகிழக்கில் பைரவர், சனீஸ்வரர் உள்ளார். இக்கோயிலில் காமிகாகம முறைப்படி நான்கு காலப் பூஜைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் 1 கந்தசஷ்டி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் ஆடிபூரம் திருவிழாவாக நடைபெறுகிறது. வடபாதிமங்கலம் கிபி 1917ம் ஆண்டில் அருணாச்சலேஸ்வரர் கோயிலை சொக்கப்ப முதலியார் என்பவர் இக்கோயிலை 1845 செங்கல்லால் கட்டி திருப்பணி செய்தார் எனவும் 1912-1917 வரை சோமசுந்தரமுதலியார் மீண்டும் இக்கோயிலை கருங்கற்பணியாக செய்தார் என கல்வெட்டு குறிப்பிடப்படுகிறது.

காலம்

ஆண்டுகள் பழமையானது ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வடபாதிமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top