Saturday Dec 28, 2024

முன்னோரை வழிபடும் ஆலயங்கள்

  • ராமேஸ்வரத்தில் 64 தீர்த்தக் கட்டங்களில் ஒன்றான, ‘அக்னி தீர்த்தம்’ எனப்படும் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும்.
  • திருச்சியில் ரங்கநாதபெருமாள் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீரங்கத்தில், காவிரி நதிக்கரையில் சாஸ்திர விதிப்படி தர்ப்பணம் செய்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.
  • கும்பகோணம், நன்னிலம், பூந்தோட்டம் ஆகிய தலங்களில் அருகே உள்ள திலதைப் பதியில், தர்ப்பணம் செய்து வழிபட்டால், முன்னோர் களின் ஆசி கிடைக்கும். ராமபிரான் தன்னுடைய தந்தைக்கு தர்ப்பணம் செய்த தலம் இது என்பது தல வரலாறு.
  • சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய திருக்குளக்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட, அவர்களின் வம்சம் தழைக்கும் என்பது ஐதீகம்.
  • கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அத்தல குளக்கரையில் முன்னோர்களுக்கு நீத்தார் கடன் தீர்த்தால் சவுபாக்கிய வாழ்வு கிடைக்கும்.
  • கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் தர்ப் பணம் செய்து, கரையில் உள்ள ஆலமரத்தடியில் தான, தர்மங்கள் செய்தால் நன்மைகள் உண்டாகும்.
  • காசியின் அருகில் உள்ள விஷ்ணுகயா ஆலமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விஷ்ணு பாதத்தில், முன்னோர் களுக்கு தர்ப்பணம் செய்தால் மகத்தான புண்ணியங்களைப் பெறலாம்.
  • காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆலயத்தில்தான் ராமபிரான், ஜடாயுவிற்கு நீத்தார் கடன் நிறைவேற்றியதாக தல புராணம் கூறுகிறது. எனவே இங்கு திதி கொடுத்து முன்னோர்களை திருப்திப்படுத்தினால் திருமாலின் திருவருள் கிடைக்கும்.
Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top