Wednesday Jan 08, 2025

மாண்டு லோஹானி குகை, மத்தியப்பிரதேசம்

முகவரி :

மாண்டு லோஹானி குகை, மத்தியப்பிரதேசம்

மண்டு, தார் தாலுகா,

தார் மாவட்டம்,

மத்தியப் பிரதேசம் 454010

இறைவன்:

சிவன்

அறிமுகம்:

                                                 லோஹானி குகைகள் பாறை வெட்டப்பட்ட குகைக் கோயிலாகும், இது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தில் உள்ள தார் தாலுகாவில் மாண்டு நகரத்தில் உள்ள மண்டி வரலாற்று தளத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த குகைக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த குகைகள் மண்டு கிராமத்தில் இருந்து ராயல் என்கிளேவ் செல்லும் வழியில் அமைந்துள்ளது. பாறை வெட்டப்பட்ட குகைகள் இந்திய தொல்லியல் துறையால் (ASI) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோவில் சிர்சோடியாவிலிருந்து தார் வரை காஜிபுரா வழித்தடத்தில் சுமார் 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

 இந்த குகைகள் கிபி 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தோண்டப்பட்டதாக நம்பப்படுகிறது. லோஹானி குகைகள், அதிக சிற்ப வேலைப்பாடுகள் இல்லாத கோயில். அகழ்வாராய்ச்சியின் போது எந்த கல்வெட்டும் காலத்தை பதிவு செய்யவில்லை. இருப்பினும், தொல்பொருள் ஆய்வுகள் சிவன், பார்வதி, விஷ்ணு மற்றும் லட்சுமி போன்ற சிலைகள் மற்றும் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இவை அநேகமாக சைவ மரபைச் சேர்ந்த மடங்களாக இருக்கலாம் என்று கூறுகின்றன. இந்த பாறை வெட்டப்பட்ட குகைகள் பண்டைய காலத்தில் சைவ யோகிகளின் வசிப்பிடமாக செயல்பட்டன.

குகைகளுக்கு முன்னால் ஒரு பாறை வெட்டப்பட்ட தொட்டி உள்ளது. குகைகளில் இருந்து கிடைத்த சுமார் 80 படங்கள் ஹோஷாங் ஷாவின் கல்லறையின் தர்மசாலாவில் உள்ள உள்ளூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. ஒரு காலத்தில் குகைகளுக்கு அருகில் சிவபெருமானுக்கு கோயில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், முஸ்லீம் ஆட்சியின் போது கோயில் அழிக்கப்பட்டது. கோவிலில் இருந்து பொருட்கள் அவர்களது கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்டன. குகைகளுக்கு தெற்கே சுமார் 5 மீட்டர் உயரமுள்ள ஒற்றைக்கல் தூண் உள்ளது. இந்த தூண் பழமையான கோவிலின் எச்சமாக கருதப்படுகிறது.

காலம்

கிபி 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மாண்டவ்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மவ் நிலையம்

அருகிலுள்ள விமான நிலையம்

இந்தூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top