Thursday Dec 26, 2024

பெரிய விப்பேடு சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

பெரிய விப்பேடு சிவன்கோயில், பெரிய விப்பேடு, செங்கல்பட்டு தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 105.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு தாலுகாவில் பெரிய விப்பேடு கிராமம் அமைந்துள்ளது. வெகு காலமாக திறந்த வெளியில் கவனிப்பார் இன்றி கிடந்த சிவலிங்கத்தை எடுத்து 2014 ஆம் ஆண்டு சிறிய கொட்டகை அமைத்து வழிபாடு செய்து வருகிறார்கள் பெரிய விப்பேடு கிராம மக்கள். வெறும் சிவன் நந்திதேவர் மட்டுமே உள்ளனர். வேறெந்த மூர்த்தங்களும் இல்லை. தினமும் பூஜை இங்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு திரு நாராயண மூர்த்தி -9994141086, திரு குபேந்திரன்-9445373669. இந்த கிராமம் திருக்கழுகுன்றத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. கோயிலுக்கு திருக்குளமும் இருக்கிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரிய விப்பேடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

செங்கல்பட்டு

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top