பரிவிளாகம் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
பரிவிளாகம் சிவன் கோயில்,
பரிவிளாகம், காட்டுமன்னார்கோயில் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608302.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கில் செல்லும் கந்தகுமாரன் சாலையில் 12 கிமீ தூரம் சென்றால் பரிவிளாகம் பேருந்து நிறுத்தம்; இங்கிருந்து ஒரு கிமீ தூரம் தெற்கில் தான் பரிவிளாகம் உள்ளது. ஊரின் தென்புறத்தில் ஒரு பெரிய குளத்தின் கரையில் உள்ளது இந்த சிவன்கோயில். விளாகம் என்பது செழிப்பான வயற்புறங்களை குறிப்பதாகும், பரி என்றால் பெருமை; முழுமை; சூழ்ந்த என பொருள் பலவாகும், செழிப்பான வயல்கள் சூழ்ந்த கிராமம் எனும் பொருளில் பரிவிளாகம் எனப்படுகிறது. பழம்கோயில் என்னவானது தெரியவில்லை, இப்போது புதிய கோயில் ஒன்றினை கட்ட தொடங்கி முக்கால்வாசி வேலைகள் முடிந்து விட்டது, புதிய சிலைகளும் தயார் நிலையில் இருக்கின்றன, ஏனோ பணிகள் கிடப்பில் உள்ளது. சிவனது ஆவுடையார் கூட வெளியில் வெயிலில் கிடக்கிறது.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பரிவிளாகம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி