Sunday Dec 22, 2024

நாட்டார்பட்டி அமராவதி அம்மன் திருக்கோயில், தென்காசி

முகவரி :

நாட்டார்பட்டி அமராவதி அம்மன் திருக்கோயில்,

நாட்டார்பட்டி,

தென்காசி மாவட்டம் – 627808.

இறைவி:

அமராவதி அம்மன்

அறிமுகம்:

 தென்காசி மாவட்டத்தில் நட்டார்பட்டி என்ற கிராமத்தில் அமராவதி அம்மன் கோயில் கொண்டுள்ளாள். தென்காசி-திருநெல்வேலி சாலையில் பாவூர்சத்திரம் ஊரின் தென்பகுதியில் கடையம் சாலையில் சென்றால் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் திப்பணாம்பட்டியை அடுத்து நாட்டார்பட்டியில் அமராவதி அம்மன் கோயில் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

       500 ஆண்டுகளுக்கு முன்பு அமராவதி அம்மன் சிலை ஒன்றை மாட்டு வண்டியில் கொண்டு சென்றபோது இந்த பகுதிக்கு வந்ததும் மாட்டுவண்டி நகராமல் ஒரே இடத்தில் நின்றது. எனவே அம்மன் இங்குதான் கோயில் கொள்ள விரும்பினால் என்பதை உணர்ந்து அந்த இடத்தின் மேற்கூரை அமைத்து அமராவதி அம்மனை பிரதிஷ்டை செய்து வழிப்பட்டனர் என்று ஒரு செய்தியும், இந்த இடத்தில் விவசாய பணிக்காக பூமியை தோண்டியபோது சுயம்புவாக அமராவதி அம்மன் சிலை கிடைத்ததாகவும் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டதாகவும் இன்னொரு தகவலும் சொல்லப்படுகிறது.

நம்பிக்கைகள்:

பக்தர்களின் குறைகளை நீக்குபவளாகவும், விருப்பங்களை நிறைவேற்றுபவளாகவும், ஆரோக்கியம் காப்பவளாகவும் இவளை போற்றுகின்றனர் பக்தர்கள்

சிறப்பு அம்சங்கள்:

 வடக்கு நோக்கிய கோயில் முன் மண்டப முகப்பில் சப்பரம் போன்ற அமைப்பு சுதையாலான அமராவதி அம்மனும் அதன் இடதுபுறத்தில் விநாயகர் வலது புறத்தில் முருகனும் தரிசனம் தருகின்றனர். முன்மண்டபத்தில் பலி பீடம் இருக்கிறது. அடுத்துள்ள கருவறையில் அமர்ந்த கோலத்தில் எட்டு கரங்களுடன் அருள்பாலிக்கிறாள் அமராவதி அம்மன். அம்மனின் இடப்புறம் உற்சவரும் உள்ளார். முன் மண்டபத்தில் அம்மனுக்கு எதிரே தெற்கு நோக்கி பைரவர் காட்சி தருகிறார் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் அரசடி விநாயகர் நாக தேவதைகளும் இருக்கின்றனர்.  தல விருட்சம் அத்தி.

திருவிழாக்கள்:

தை மாதம் மூன்று நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அதில் ஒரு நாள் கொடைவிழா கொண்டாடப்படுகிறது. அன்று அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா சிறப்பாக நடைபெறுகிறது. ஆடி செவ்வாய் கிழமைகளில் அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட்டு அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். செவ்வாய், வெள்ளி மற்றும் தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மற்றபடி தினமும் காலை ஒரு வேளை பூஜை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நாட்டார்பட்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

தென்காசி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top